புதிய வகையில் மின்சாரம் தயாரிக்கும் முறை.

வெப்பத்தை மூலமாக
கொண்டு மின்சாரத்தை உருவாக்கும்
பல செலுத்தங்களில் ( Process) வெப்பம்
பலவகைகளிலும்
விரயமாகிறது . இந்த

விரயங்களை மீண்டும் மின்சாரமாக
மாற்றும் ஒரு புதிய
நுட்பத்தை ( Technology)
ஆஸ்திரேலியவை சேர்ந்த
விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

மின்நிலையங்கள் மற்றும் வாகன
புகை கழிவுகளில் வெளியேறும்
வெப்பத்தில் இருந்து நேரிடையாக
மின்சாரம் தயாரிக்க முடியும்
என்று கூறுகின்றனர் .
மோனஷ் பல்கலைக்கழகம்
ஆராய்ச்சியாளர்கள்
அயனி திரவத்தை (Ionic Liquid ) சார்ந்த
கரிய உமிழ்வற்ற ( Carbon Emissions)
அதிசக்தி வெளிபாடு கொண்ட
மின்சாரம் தயாரிக்கும் வெப்பசெல்
( Thermo Cell)
ஒன்றை உருவாக்கியுள்ளதாக
தெரிவிகின்றனர். இது சுமார் 212
முதல் 392 டிகிரி பாரன்ஹீட்
வெப்பநிலையில் இயங்ககூடியது.

ஒரு பொருளின்
ஒரு பகுதியை குளுமையான
பரப்பிலும்
மற்றொரு பகுதியை சூடான
பரப்பிலும் வைக்கும் போது அந்த
பொருளில் சூடான பகுதியில்
இருந்து குளுமையான
பகுதியை நோக்கி மின்
நகர்வு ஏற்படும் . இதை செய்யும்
சாதனம் தான் வெப்பசெல் (ThermoCell )
என்று அழைக்கப்படுகிறது .

மின்நிலையங்களில் தரங்கெட்ட( Low
Grade )
நிலக்கரியை பயன்படுத்தி மின்சாரம்
தயாரிக்கும்
போது அதிலிருந்து கழிவாக
வெளியேறும் 266 டிகிரி பாரன்ஹீட்
வெப்பம் கொண்ட புகையில் இந்த
புதுவித
முறையை கொண்டு மின்சாரம்
தயாரிக்க முடியும் என்று மோனஷ்
விஞ்ஞானிகள் கூறுகின்றனர் .

மின்நிலையங்களில் புகையுடன்
சேர்ந்து வெளியேறும்
வெப்பத்தை வெப்பசெல்லின் ( ThermoCell )
ஒருபகுதியையும்
காற்று மற்றொரு பகுதியையும்
படும்படி வைக்கும்
போது மின்சாரம்
சேமிக்கப்படுகிறது 
உருவாக்கபடுகிறது .

பொதுவாக வெப்பசெல்களில்
வெப்பத்தை கட்டுபடுத்த
நீரை மட்டுமே பயன்படுத்துவோம் . ஆனால்
நாங்கள் உருவாக்கிய
வேப்பசெல்களில் நீருக்கு பதில்
மின்பகுபொருள் கொண்ட திரவ
பொதியை ( Liquid packed with electrolytes )
பயன்படுத்துகிறோம் அது அதிக
கொதிநிலையை தாங்கக்கூடியது என்று மோனஷ்
ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் .

சூடான எந்தவொரு பொருளில்
இருந்தும்
மின்சாரத்தை உண்டாக்குவது இந்த
வெப்பசெல்கள் (ThermoCell ) . சூடான இடம்
என்றால் கார்களின் எஞ்சின்கள் , சூரிய
வெப்பம் , மின்நிலையங்கள் என
சொல்லலாம் . ஏன் மனிதனின் உடல்
சூட்டில் இருந்தும் மின்சாரம்
தயாரிக்கலாம் ( கூகுளின்
அறிவியல் சந்தையில் இதை பற்றிய
செய்தி உண்டு - https://www.googlesciencefair.com/en/projects/ahJzfnNjaWVuY2VmYWlyLTIwMTJyRAsSC1Byb2plY3RTaXRlIjNhaEp6Zm5OamFXVnVZMlZtWVdseUxUSXdNVEp5RUFzU0IxQnliMnBsWTNRWXA2ZVVBZ3cM
வெப்பசெல்கள் சாதாரண மின்சார
தயாரிப்பு செலுத்தங்களை ( Process)
காட்டிலும்
விலை மலிவானது. மேலும்
மோனஷ் ஆராய்ச்சியாளர்கள் இதன்
மின்சார வெளிபாட்டை (Output )
அதிகரிக்க அதற்குரிய
மேம்படுத்தும் வேளைகளில்
ஈடுபட்டுள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...