58 வயதிலும் ஆசிரியர் ஆகலாம்!

மதுரையில் நடந்த பி.எட்., ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணியில், 58 வயது பட்டதாரி நேற்று பங்கேற்றார். மதுரை தமிழ்ச் சங்கம் ரோட்டை சேர்ந்த சுப்புமுத்து மகன் மதியரசு. இவர், 10.6.1956ல் பிறந்தார். பி.ஏ., (வரலாறு), பி.எட்., படித்து, பல ஆண்டுகளாக ஆசிரியர் பணிக்காக
முயற்சி செய்தார். கடந்த ஆக.,18ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) தாள் 2ல் தேர்ச்சி பெற்றார்.மதுரை ஓ.சி.பி.எம்., பள்ளியில் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றார். இவருக்கு, ஆசிரியர் பணி வாய்ப்பு கிடைத்தால், இந்தாண்டு அதிகபட்சமாக 4 மாதங்களில் பணியில் இருந்து ஓய்வு பெற்று விடுவார்.ஓய்வு பெறும் ஆண்டிலும், டி.இ.டி., தேர்வில் பங்கேற்று ஆசிரியர் ஆகிவிட வேண்டும் என்ற மதியரசுவின் முயற்சியை கல்வி அதிகாரிகள் பாராட்டினர்.
Click Here

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...