மிஸ்டு கால் கொடுத்து, பணம் பறிக்கும் புதிய கைவரிசை

'மொபைல் பேங்கிங்' மூலம் அதிகமாக பணப்பரிவர்த்தணை செய்துவரும் நபரா நீங்கள்? உங்களுக்கு +375602605281, +37127913091 போன்ற எண்களில் இருந்து மிஸ்டு கால்கள் வருகிறதா? அதை புறக்கணிப்பதோடு அல்லாமல், உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவியுங்கள்.  மிஸ்டு கால் வரும் அது போன்ற எண்ணுக்கு
நீங்கள் திரும்ப அழைத்தால், உங்கள் சிம்கார்டில் இருந்து சுமார் ஆயிரம் ரூபாயில் இருந்து இரண்டாயிரம் ரூபாய் வரை அழைப்புக்கான கட்டணமாக கரைந்து விடும். அதுமட்டுமின்றி, உங்கள் செல்போனில் உள்ள வங்கி கணக்கின் ரகசிய கடவுச்சொல் உள்ளிட்ட அனைத்து தொடர்புகளும் மூன்றே வினாடிகளுக்குள் வெளிநாட்டில் இருக்கும் சில மோசடிப் பேர்வழிகளை சென்றடைந்து விடும். அடுத்த சில நிமிடங்களில், நீங்கள் வங்கி இருப்பில் வைத்து இருக்கும் தொகை முழுவதும் களவாடப்படும். நைஜீரியாவின் ஒரு இனத்தை சேர்ந்த மோசடிப் பேர்வழிகள் இந்த திட்டத்தை கையாண்டு வருகின்றனர்.
இதைப்போன்ற கொள்ளையர்களிடம் பணத்தை பறிகொடுத்தவர்களில் ஒருவர் வடசென்னை பகுதியை சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ். இவரது வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவிய மோசடிப் பேர்வழிகள் அதில் இருந்த ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 34 ரூபாயையும் எடுத்து கொண்டனர். இதைப் பற்றி அவர், கமிஷ்னர் அலுவகத்தில் புகார் கொடுத்துள்ளார். காவல் துறையினரும், உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆறுதல் கூறி அனுப்பியுள்ளனர்.

வேறு ஏதோ ஒரு கண்டத்தில் அமர்ந்து கொண்டு, ஒரேயொரு மிஸ்டு காலின் மூலம் நம்மை மோசம் செய்யும் கும்பலை பிடித்து, அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரித்து கொடுப்பது என்பது நடைமுறைக்கு சாத்தியப்படாத செயல் என்று சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், மோசடி பேர்வழிகளிடம் ஏமாறாமல், நம் பணத்தை நாமே விழிப்புணர்வுடன் இருந்து பார்த்து கொள்வதே அவசியமானதாக தெரிகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...