இட ஒதுக்கீடு மேல் முறையீட்டு மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் சம்மதம் : மைனாரிட்டிகளுக்கு 4.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க அரசு விருப்பம்

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான, 27 சதவீத இட ஒதுக்கீட்டில், சிறுபான்மையினரில், பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ளவர்களுக்கு, 4.5 சதவீத உள்ஒதுக்கீடு
வழங்க வேண்டும் என்ற, மத்திய அரசின் விருப்ப, மேல் முறையீட்டு மனுவை விசாரிக்க, சுப்ரீம் கோர்ட் நேற்று, சம்மதம் தெரிவித்துள்ளது. இது குறித்து, முறையாக விண்ணப்பிக்குமாறு, மத்திய அரசை, நீதிபதிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். நாடு முழுவதும், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில், இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிற து. மத்திய அரசின், வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வி இட ஒதுக்கீடு முறையில், ஓ.பி.சி., எனப்படும், இதர பிற்படுத்தப்பட்டோரை கொண்ட பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களுக்கு, 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த பட்டியலில், 400க்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். அவர்களில், சிறுபான்மையினரும் அடக்கம். அவர்களையும் இணைத்து, பொதுவாக, 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அறிவிப்பு : இந்நிலையில், மத்தியில் ஆளும், காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 2011, டிச., 22ல், ஓர் அறிவிப்பை ?வளியிட்டது. அதில், ஓ.பி.சி., பிரிவினருக்கான, 27 சதவீத இட ஒதுக்கீட்டில், சிறுபான்மை சமுதாயத்தினரில், பொருளாதார ரீதியில், மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு, உள் ஒதுக்கீடாக, 4.5 சதவீதம் வழங்க வேண்டும் என, மத்திய அரசு தெரிவித்தது. இதனால், ஓ.பி.சி., பட்டியலில் உள்ள, பிற்படுத்தப்பட்டோர் பாதிக்கப்படுவர் என்பதால், இதை எதிர்த்து, வழக்கு தொடரப்பட்டது. அதே நேரத்தில், ஆந்திராவில், முதல்வராக இருந்த, காங்கிரசை சேர்ந்த, ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி, "ஆந்திராவில் உள்ள முஸ்லிம்களுக்கு, 4.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என, அறிவித்தார். அதற்கும், ஓ.பி.சி., பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்த வழக்கு, ஆந்திர ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. நீதிபதிகள், ஆந்திர, காங்., அரசின், 4.5 சதவீத ஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவிட்டனர். "மத அடிப்படையில், இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது; அவ்வாறு வழங்குவது, அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய, அனைத்து சமுதாயத்தினருக்கும், சம உரிமை என்ற அம்சத்தையே கேள்விக்குரியதாக்கி விடும்' என, நீதிபதிகள், அப்போது, தங்கள் உத்தரவில் தெரிவித்திருந்தனர். உத்தரவு : ஆந்திர உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை, விசாரிக்க மறுத்த சுப்ரீம் கோர்ட், 2012, ஜூன் மாதம் பிறப்பித்த உத்தரவில், "ஆந்திர உயர் நீதிமன்ற உத்தரவு செல்லும்' என, அதிரடியாக அறிவித்தது. அரசியல் நோக்கத்திற்காக... : மேலும், இந்த விவகாரத்தை, ஆந்திர அரசு, அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்துவதாகவும், சுப்ரீம் கோர்ட், அப்போது கண்டித்தது. நிலைமை இவ்வாறு இருக்க, மத்திய, காங்கிரஸ் கூட்டணி அரசு, சிறுபான்மையின மக்களை திருப்திபடுத்துவதற்காக, மீண்டும், சுப்ரீம் கோர்ட்டின் கதவுகளை தட்டி உள்ளது. நேற்று முன்தினம், இதற்கான மனுவை தயாரித்த மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில், மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. அந்த மனு, துவக்கத்திலேயே நிராகரிக்கப்படும் என, பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில், ஆந்திர உயர் நீதிமன்ற உத்தரவை தள்ளுபடி செய்ய, 2012ல் சுப்ரீம் கோர்ட்மறுத்ததால், மத்திய அரசின், இந்த மேல் முறையீட்டு மனுவையும், சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்யும் என, எதிர்பார்க்கப்பட்டது.பட்டியல் : மத்திய அரசின் இந்த மனு, நீதிபதி, கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான, "டிவிஷன் பெஞ்ச்' முன் நேற்று விசாரணைக்கு வந்தது. முந்தைய உத்தரவில் மாற்றம் செய்யக் கோரிய, அந்த மனுவை விசாரிக்க ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், என்னென்ன திருத்தங்களை மத்திய அரசு எதிர்பார்க்கிறது என்பது குறித்து, முறையாக மனு செய்யுமாறு, நேற்று உத்தரவிட்டனர்.மத்திய அரசு சார்பில், சொலிசிட்டர் ஜெனரல், மோகன் பராசரன் ஆஜரானார்.சிறுபான்மையினர் அல்லது மைனாரிட்டிகள் என்ற பட்டியலில், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சிகள் உள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...