தமிழக பழங்குடி மாணவர்களுக்கான உதவித் தொகையை உடனே வழங்குக


தமிழகத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மாணவர்கள் தம் கல்விக்கான மத்திய அரசின் 2013-14 ஆம் ஆண்டிற்கான உதவித் தொகையை இன்னும் பெறவில்லை.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பிற்கு முந்தைய மற்றும் பிந்தைய மாணவர்கள் சுமார் 7,2300 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதன் அளவு சுமார் 549 கோடி ரூபாயாகும்.
இவர்கள் தங்கள் கல்வியை தொடர மத்திய அரசின் உதவித் தொகையை பெரிதும் நம்பி இருக்கிறார்கள். இந்த கல்வி ஆண்டு முடியும் தருவாயிலும் அவர்களுக்கான உதவிதொகை இன்னும் வெளியிடப்படவில்லை. இதனால், பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய நிலை இருக்கும் அவர்களின் கல்வியை மிகவும் பாதிப்படைந்துள்ளது.
மேலும், தமிழகத்தின் மதுரை காமராஜர் பல்கலைகழகம், பாரதியார் பல்கலைகழகம், பாரதிதாசன் பல்கலைகழகம், அழகப்பா பல்கலைக்கழகம் உட்பட பலதின் ஆய்வு மாணவர்களுக்கும் கடந்த 18 மாதங்களாக மத்திய பல்கலைகழக மானியக்குழுவின் உதவிதொகையும் கொடுக்கப்படவில்லை.
எனவே, இந்த உதவித் தொகைகளை உடனடியாக அளிக்க வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறியுள்ளார்
.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...