அதிருப்தி!!!

தமிழகத்தில் 2012, 2013ல் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது. 60% மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித் தது. பிறகு, வெயிட்டேஜ் மதிப்பெண்கள்
போடுவோம் என்றும் அறிவித்தது.இட ஒதுக்கீடு சமூகத்தினருக்கு அரசு 5 சதவீத மதிப்பெண் குறைத்துள்ளது. ஆனால் வெயிட்டேஜ் மதிப்பெண் முறை அப்படியே நடைமுறையில் உள்ளது. இதனால் திறமையானவர்கள் பாதிக்கப்படுவதாக பட்டதாரிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

வெயிட்டேஜ் மதிப்பெண் போடுவதற்காக 2012ல் அரசு ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில் பள்ளிக் கல்வி அமைச்சர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டது. அதில் மேனிலைப் படிப்பில் பெற்ற மதிப்பெண்களுக்கு 15, டிடிஎட், டிஇஇஎட் தேர்வில் பெற்ற மதிப்பெண்களுக்கு 25 மதிப்பெண்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களுக்கு 60 என மொத்தம் 100 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டன. பட்டதாரிகளுக்கு வெயிட்டேஜ் என்பது மேனிலைத் தேர்வுக்கு 10, பட்டப்படிப்புக்கு 15, பிஎட் தேர்வுக்கு 15, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 60 என மொத்தம் 100 என நிர்ணயிக்கப்பட்டது.

இதில் பிரச்னை, தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் (90) பெற்றவருக்கும், 69 சதவீத மதிப்பெண்கள் (104) பெற்றவருக்கும் வெயிட்டேஜ் முறையில் 42 மதிப்பெண் களே கிடைக்க வாய்ப்புள் ளது. இதனால் 104 மதிப்பெண் பெற்றவர் பாதிக்கப்படுகிறார். பிஎட், பட்டப் படிப்பு ஆகியவற்றில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றவரும், 69 சதவீத மதிப்பெண் பெற்றவரும் வெயிட்டேஜ்படி சமமாக 12 மதிப்பெண்களே பெற வாய்ப்புள்ளது.

மேனிலைத் தகுதிக்கு (50% 60%வரை) 2 மதிப்பெண்கள், பட்டப் படிப்பு தகுதிக்கு(50%70% வரை) 12 மதிப்பெண், பிஎட் தகுதிக்கு (50%70% வரை) 12 மதிப்பெண், டிஇடி தேர்வுக்கு (60%70% வரை) 42 மதிப்பெண்கள் என மொத்தம் 68 மதிப்பெண்கள் கிடைக்கிறது. இதன்படி பார்த்தால் 1ம் எண் நபருக்கும், அதிக மதிப்பெண் பெற்றுள்ள 2ம் எண் நபருக்கும் 68 மதிப்பெண்கள் கிடைக்கிறது. இதனால் 2ம் எண் நபர் பாதிக்கப்படுகிறார். இட ஒதுக்கீட்டு முறையின் கீழ் வராதவர்கள் மேற்கண்ட முறையில் வெயிட்டேஜ் பெறும்போது யார் திறமையானவர்கள், தகுதியானவர்கள் என்ற குழப்பம் ஏற்படுகிறது.
எனவே வெயிட்டேஜ் முறையில் அரசு மாறுதல் கொண்டு வர வேண்டும் என்று பட்டதாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...