ஜனவரி 17ம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் பேசுகையில், மானிய விலை
சமையல் சிலிண்டரின் எண்ணிக்கையை 9 ல் இருந்து 12 ஆக உயர்த்த வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கேட்டுக் கொண்டார். பொதுவாக அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த ஆமை வேகத்தில் செயல்படும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, நேரு குடும்ப வழிதோன்றலான ராகுல் கோரிக்கை விடுத்ததும் உடனடியாக செயல்பட்டு ஜனவரி இறுதிக்குள்ளேயே மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்தி அறிவித்தது. ஏப்ரல் முதல் தேதியிலிருந்து வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு ஒன்று வீதம் மானிய விலை சிலிண்டர்களை பெற முடியும் என அரசு உத்தரவில் கூறப்பட்டது.
மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை அதிகரித்ததால் அரசுக்கு கூடுதலாக ரூ.5000 கோடி நிதிச்சுவை ஏற்பட்டுள்ளது. மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை உயர்த்தியது மட்டுமின்றி, மானிய விலை சமையல் சிலிண்டர்களை நேரடி மானிய திட்டத்தின் மூலம் பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியம் என்ற கட்டுப்பாட்டையும் விலக்கிக் கொண்டது. இந்த திட்டம் நாடு முழுவதும் 18 மாநிலங்களில் உள்ள 289 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு திடீரென இத்திட்டத்தை விலக்கிக் கொண்டுள்ளது. ஜனவரி மாதத்தில் டில்லி, மும்பை உள்ளிட்ட மேலும் 105 மாவட்டங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்தின்படி வாடிக்கையாளர்கள் சந்தை விலையில் சிலிண்டரை பெற்ற பின்னர், அதறகான மானியம் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆதார் அட்டை பெறாதவர்களுக்கு இது மிகவும் சிக்கலாக இருந்து வருகிறது. பெரும்பாலானவர்களால் நேரடியாக வங்கிக் கணக்கில் மானியத் தொகையை பெற முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இதனால் நேரடி மானிய திட்டத்தை அமல்படுத்துவதற்காக மத்திய அரசு குழு ஒன்றை அமைத்திருந்தது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசு அறிவித்த நேரடி மானிய திட்டம் முறையாக செயல்படாதது அரசுக்கு பெரும் சிக்கலாகவும், பின்னடைவாகவும் இருந்தது. அதற்காக குழு ஏற்படுத்தப்பட்டதால் இனி எல்லாம் முறைபடுத்தப்படும் என்பதால் அரசு நிம்மதி அடைந்திருந்தது. மக்கள் பலர் ஆதார் அடையாள அட்டை பெறாததால் இத்திட்டத்தை முறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் உருவானது. இதனால் அரசும், நந்தன் நீலேகனியும் ஆதார் அட்டை மூலம் நேரடி வங்கிக் கணக்கில் மானிய தொகையை பெறும் திட்டத்தை இணைக்கும் பணியை துரிதப்படுத்தி வந்தது. அரசின் நல திட்டங்களை பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியம் எனவும் கூறப்பட்டது. இதற்ககு இன்போசிஸ் போன்ற இந்தியாவின் மிகப் பெரிய கம்பெனிகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டது.
ஆதார் திட்டம் மும்முரப்படுத்தப்பட்டு வந்த நிலையில், அரசின் மானிய திட்டங்களை பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியம் இல்லை என சுப்ரீம் கோர்ட் நேரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அளித்த உத்தரவின்படி, ஆதார் அட்டையை காரணம் காட்டி நலத் திட்டங்களை பெறுவதில் யாரும் பாதிக்கப்படக் கூடாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. அதே சமயம், திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா, வரும் காலத்தில் ஆதார் அட்டை மூலம் மானியம் பெறும் திட்டம் எளிமையாக்கப்படும் என கூறி இருந்தார். இந்நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள அரசு ஊழியர்கள், ஆதார் அட்டை மூலம் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கிலேயே தங்களின் சம்பளங்களைச் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர். சம்பளம் பெறுவதற்கும், மானியம் பெறுவதற்கும் தனித் தனி வங்கிக் கணக்கு வேண்டாம் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். டில்லியில் திருமணப் பதிவுகளுக்கும் ஆதார் அட்டை அவசியம் எனக் கூறப்பட்டது. இது குறித்து ஆதார் அட்டை திட்டத்தின் தலைவர் நீலேகனி விளக்கம் அளிக்கையில், ஆதார் அட்டை அதை பயன்படுத்தி இடத்தைச் சார்ந்து அவசியமானதாகும்; அது கட்டாயம் என நான் எப்போதும் கூறவில்லை; அது அனைத்து இடங்களிலும் பொதுவாக்கப்படும் என்று தான் கூறினேன் என கூறினார்.
இப்போதும் இடத்திற்கு தகுந்தாற் போல் ஆதார் அட்டையின் அவசியம் மாறுபடும் என கூறி இருக்கும் நீலேகனி, 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆதார் அட்டை திட்டம் துவங்கப்பட்ட போது, ஆதார் அட்டை இல்லாவிட்டால் அடிப்படை உரிமைகள் எதையும் பெற முடியாது என கூறி இருந்தார். நாட்டின் மக்களிடம் இருந்து புகைப்படம், கைரேகைகள் உள்ளிட்ட தகவல்களை சேமிக்க துவங்கி 3 ஆண்டுகள் ஆக உள்ள நிலையில் முந்தைய கருத்திற்கு நேர்மாறான கருத்தை தெரிவித்துள்ளார். ஆதார் அட்டைக்கு தேசிய பொது அடையாள அட்டைக்கான அங்கீகாரத்தை கொடுக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதற்கான மசோதா பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட உள்ளது. பல்வேறு வகையில் குழப்பங்களையும் ஏற்படுத்தி, முன்னுக்கு பின் முரணான கருத்துக்களையும், விமர்சனங்களையும் பெற்று பந்தாடப்பட்டு வரும் ஆதார் அட்டை திட்டம் கேலி கூத்தாக்கப்பட்டுள்ளதே உண்மை.