'வெயிட்டேஜ்' மதிப்பெண் அளிப்பதில் மாற்றம்: டி.இ.டி., முடிவில் புதிய உத்தரவு

ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அட்டவணையில், சிறிய மாற்றம் செய்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில், இட ஒதுக்கீடு பிரிவினர், டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெறுவதற்கான, 60 சதவீத மதிப்பெண்ணை, 55 சதவீதமாக குறைத்து,
முதல்வர் அறிவித்தார். இதற்கு ஏற்ப, டி.இ.டி., தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை, 'வெயிட்டேஜ்' அடிப்படையில் கணக்கிடும் முறையில், சிறிய மாற்றம் செய்து, பள்ளி கல்வித்துறை செயலர், சபிதா, நேற்று, அரசாணை பிறப்பித்தார். அதன்படி, டி.இ.டி., தேர்வில், தேர்வர் எடுக்கும் மதிப்பெண், 'வெயிட்டேஜ்' அடிப்படையில், மதிப்பெண் அளவு விவரம் வருமாறு:
* 90 சதவீதம், அதற்கு அதிகமாக பெற்றால் - 60 மதிப்பெண்

* 80 - 90 சதவீதம் வரை - 54

* 70 - 80 சதவீதம் வரை - 48

* 60 - 70 சதவீதம் வரை - 42

* 55 - 60 சதவீதத்திற்குள் எடுத்தால் - 36

கடந்த, 2013ல் நடந்த தேர்வு மற்றும் வருங்காலத்தில் நடக்கும் தேர்வில், மேற்கண்ட முறையில் மதிப்பெண் கணக்கிடப்படும் என, அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...