உடலுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறோமோ அதேபோன்று மனதுக்கும்
முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நல்ல ஆரோக்கியமான உணவைச் சாப்பிட்டும்,
உடலை திடகாத்திரமாக பாதுகாத்தும் ஆரோக்கியமாக இல்லையென்றால் நீங்கள் மன
அழுத்தத்தில்
இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
முக்கியமாக உணவு உண்ணும் நேரத்தில் உங்கள் மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
எப்படி தவறான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது ஆகியவை உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்குமோ, அதேபோன்று கோபம், பழிவாங்கும் எண்ணம், பொறாமை போன்ற குணங்களும் உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.
நாம் கோபப்படும்போது அல்லது மேற்கூறிய குணங்களை வெளிப்படுத்தும்போது நமது முன்நெற்றியை இறுக்கி, புருவங்களைச் சுருக்கும்போது, நமது தமனிகளும் சுருங்கும். இதனால் ரத்த ஓட்டம் தடைபடும். இவ்வாறு அடிக்கடி நிகழும்போது தமனிகள் சுருங்கி அதில் ஏதாவது பொருள்கள் தங்கிவிடும். இது மாரடைப்புக்கு அல்லது பக்கவாதத்துக்கு வழி வகுக்கும்.
வாழ்க்கையில் வரும் பிரச்னைகள், கோபங்கள் போன்றவற்றை அவ்வப்போது மறந்துவிடாமல் அவற்றை அடைகாத்து வைத்தால், நமது உடலைத்தான் பாதிக்கும். அன்றாடம் வாழ்க்கையில் என்ன பிரச்னைகளைச் சந்தித்தாலும் அவற்றை பாஸிட்டிவ்வாக மாற்றிக் கொள்ளும் மனநிலையைப் பழக்கப்படுத்திக் கொண்டால், வாழ்வாங்கு வாழலாம்!