தமிழகம் முழுவதும், நேற்று முன்தினம் நடந்த வாக்காளர்
பெயர் சேர்ப்பு சிறப்பு முகாமில், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர்,
புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். ஒவ்வொரு தொகுதியிலும், 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர், விண்ணப்பித்திருப்பது, அரசியல் கட்சிகளுக்கு, பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒவ்வொரு தேர்தலின்போதும், ஓட்டுப்பதிவு அன்று, ஓட்டு போட வருவோரில் பலர், 'வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை' என, திரும்பிச் செல்வது வாடிக்கை. இப்பிரச்னைக்கு தீர்வு காண, நாடு முழுவதும், கடந்த அக்டோபரில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டது. 33 லட்சம் பேர், விண்ணப்பம் அளித்தனர். இதில், ஆறு லட்சம் பேர் நிராகரிக்கப்பட்டு, 27 லட்சம் பேர் பெயர் சேர்க்கப்பட்டு, ஜனவரியில், புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில் விடுபட்டோரை சேர்ப்பதற்காக, நேற்று முன்தினம், நாடு முழுவதும், சிறப்பு வாக்காளர் சேர்ப்பு முகாம் நடத்தப்பட்டது. தமிழகத்தில், 60,418 ஓட்டுச் சாவடிகளில், சிறப்பு முகாம் நடந்தது. ஒரே நாளில், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர், வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். ஒவ்வொரு தொகுதியிலும், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களில், பெரும்பாலானோர் புதிய வாக்காளர்கள். தங்கள் துணையின்றி, பொதுமக்கள் ஆர்வமுடன், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திருப்பது, அரசியல் கட்சிகளிடம், கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பித்தோர், யாருக்கு ஓட்டு போடுவர் என்பது புதிராக உள்ளது. இவர்களின் ஓட்டுகளைப் பொறுத்து, வேட்பாளர்களின் வெற்றி, தோல்வி மாறும் சூழ்நிலை உள்ளது. மேலும், 'இம்மாதம் 25ம் தேதி வரை, வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்' என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. எனவே, அனைத்து தொகுதிகளிலும், வாக்காளர் எண்ணிக்கை உயர உள்ளது. புதிய வாக்காளர்களை இழுக்க, அரசியல் கட்சிகள், புதிய வியூகம் அமைப்பது குறித்து, ஆலோசித்து வருகின்றன.
இது குறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறியதாவது: தமிழகம் முழுவதும் இருந்து வந்துள்ள விண்ணப்பங்கள், முறையாக ஆய்வு செய்யப்படும். பலர், வேட்பாளர் பட்டியலில், பெயர் இருப்பது தெரியாமல் விண்ணப்பித்துள்ளனர். சில விண்ணப்பங்கள், போலியாக இருக்கலாம் என, சந்தேகிக்கிறோம். எனவே, அவற்றில் உள்ள புகைப்படங்களை வைத்து, ஆய்வு செய்யப்படும். தகுதியானவர் பெயர், உடனடியாக வேட்பாளர் பட்டியலில் சேர்க்கப்படும். அதன் விவரம், இணையதளத்தில் உடனுக்குடன், பதிவு செய்யப்படும். புதிய வாக்காளர்கள் அடங்கிய, துணை வாக்காளர் பட்டியல், ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

சிறப்பு முகாம்:

கலக்கம்:

ஆய்வு: