தமிழக சிறைகளில் உள்ள தண்டனை மற்றும் விசாரணை கைதிகள், 58 பேர், இன்று
துவங்கும், பிளஸ் 2 தேர்வை, சென்னை மத்திய சிறையில் எழுதுகின்றனர்.
தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று
துவங்குகிறது. 8.26 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்க உள்ளனர். அவர்களுடன், தமிழக சிறைகளில் உள்ள, 58 சிறைவாசிகளும் தேர்வு எழுதுகின்றனர். அதன்படி, இந்த ஆண்டு தேர்வில், புழல் தண்டனை சிறையில், 15 பேர்; விசாரணை சிறையில், மூன்று பேர்; மதுரை மத்திய சிறையில், 14 பேர்; கடலூர் சிறையில், 12 பேர்; கோவை சிறையில், ஐந்து பேர்; பாளையங்கோட்டையில், நான்கு பேர்; சேலத்தில், மூன்று பேர்; வேலூரில், இரண்டு பேர் என, 58 பேர், தேர்வு எழுதுகின்றனர். புழல் மத்திய தண்டனை சிறை வளாகத்தில், சிறப்பு தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. கல்வித் துறை சார்பில், அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் சுந்தர்ராஜன், கலைச்செல்வி, சுவாமிநாதன் ஆகியோர், தேர்வுத் துறை கண்காணிப்பாளர்களாகச் செயல்படுவர்.
சிறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மற்ற மாவட்ட சிறைகளில் இருந்து தேர்வெழுதும் சிறைவாசிகள், நேற்று முன்தினம் மாலை, புழல் மத்திய சிறைக்கு பாதுகாப்பாக வந்து சேர்ந்தனர். தேர்வுக்காக, அவர்கள் எவ்வித இடையூறுமின்றி அமைதியாக படிக்க, சிறை நிர்வாகம் உரிய வசதி செய்து தந்து உள்ளது.
கடந்த ஆண்டு, சென்னை புழல், கோவை, பாளையங்கோட்டை, மதுரை, கடலூர், சேலம், திருச்சி என, தமிழக மத்திய சிறைகளில் உள்ள விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் என, 39 பேர், புழல் மத்திய சிறையில், பிளஸ் 2 தேர்வு எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.