""திருப்பூர் மாவட்டத்தில், லோக்சபா தேர்தல் நடத்தை
விதிமுறைகளை கண்காணிக்க, 24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. "மைக்ரா
அப்சர்' விரைவில் நியமிக்கப்படுவர்,'' என, திருப்பூர்
லோக்சபா தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான, கலெக்டர் கோவிந்தராஜ் தெரிவித்தார். அவர், மேலும் கூறியதாவது:திருப்பூர் லோக்சபா தொகுதியில், திருப்பூர் வடக்கு, தெற்கு, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. தேர்தல் நடவடிக்கையை உற்றுநோக்கும் வகையில், 24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சட்டசபை தொகுதிக்கு மூன்று படைகள் வீதம், மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளிலும், அலுவலர் தலைமையில், ஒரு சப்-இன்ஸ்பெக் டர், இரண்டு போலீசாருடன் செயல்படும். இன்று (நேற்று) முதல் பறக்கும் படையினர் பணி துவங்கியுள்ளது. பணம், மதுபானம் கடத்தலை தடுக்க, 24 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அலுவலர் தலைமையில், ஒரு சப்-இன்ஸ்பெக்டர், மூன்று போலீசாருடன் இக்குழு இயங்கும். தேர்தல் நடத்தை விதிமுறை பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் வகையில், எட்டு வீடியோ குழுக்களும், 24 "வீடியோ லைவ்' குழுவும் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதி வாரியாக தேர்தல் செலவை கண்காணிக்க, நேர்முக உதவியாளர் (கணக்கு) தலைமையில், 16 குழுக்கள் உள்ளன. தேர்தல் தொடர்பான தகவல் கொடுக்க, கலெக்டர் அலுவலகத்தில் மீடியா ரூம், கன்ட்ரோல் ரூம் அமைக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் தொடர்பான புகார் தெரிவிக்க 1800 42570 23 என்ற கட்டணமில்லா தொலைபேசி இணைப்பு வழங்கப்பட உள்ளது. தனியாக பதிவேடு பராமரிக்கப்பட்டு, புகார்கள் பதிவு செய்யப்பட்டடு, நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும்.
வரும் 29ல், வேட்பு மனு தாக்கல் துவங்கும். ஏப்., 5 கடைசி நாள். ஏப்., 9 வாபஸ் பெற கடைசி நாள். ஏப்., 24ல் ஓட்டுப்பதிவு நடைபெறும். மே 16ல் ஓட்டு எண்ணிக்கை, திருப்பூர் எல்.ஆர்.ஜி., கல்லூரி வளாகத்தில் நடை பெறும். தேர்தல் பணிக்காக 10 ஆயிரத்து 152 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு ஊழியர்கள், "மைக்ரோ அப்சர்வர்'களாக விரைவில் நியமிக்கப்படுவர். தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, லோக்சபா தொகுதி வாரியாக, செலவுகளை கண்காணிக்கும் தேர்தல் பார்வையாளர் ஒருவர், இரண்டு தேர்தல் பார்வையாளர்கள் (பொது), தேர்தல் விழிப்புணர்வு பார்வையாளர் ஒருவர், போலீஸ் தேர்தல் பார்வையாளர் ஒருவர் என ஐந்து பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.