2,888 பேருக்கு ரத்த அழுத்தம் 1,952 பேருக்கு சர்க்கரை நோய் :மருத்துவ முகாமில் கண்டுபிடிப்பு


சென்னை மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்ட மருத்துவ முகாமில், 2,888 பேருக்கு உயர் ரத்த அழுத்தமும், 1,952 பேருக்கு
சர்க்கரை நோய் இருப்பதும், கண்டறியப்பட்டு உள்ளது.
முதல்வர் பிறந்தநாளையொட்டி, சென்னை மாநகராட்சி சார்பில், நகர் முழுவதும் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. அதில், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், நுரையீரல், இதயம், கண், காது, மூக்கு, தொண்டை, பல், பெண்களுக்கான மார்பக புற்றுநோய், கர்ப்பபை வாய் புற்றுநோய் உட்பட, பல்வேறு மருத்துவ பரிசோதனைகள்
மேற்கொள்ளப்பப்பட்டன.
இந்த பரிசோதனை முடிவில், நோய் பாதிப்பு உள்ளவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கும் நடவடிக்கைகள் துவங்கப்பட்டு உள்ளன.மாநகராட்சி மருத்துவ முகாம் மூலம், 16 ஆயிரத்து, 897 பேருக்கு, ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 1,952 பேருக்கு சர்க்கரை நோயும், 2,888 பேருக்கு உயர் ரத்த அழுத்தமும் இருப்பது கண்டறியப்பட்டது.
ரத்த சோகை, 6,600 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 2,011 பேருக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்தது. நகரில், 168 பெண்கள், மார்பகம் மற்றும் கர்ப்பபை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதும் முகாம் மூலம் உறுதி செய்யப்பட்டது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...