மக்களவை தேர்தல் அமைதியாக நடைபெற நாடு முழுவதும் பாதுகாப்பு பணியில் 2
லட்சத்துக்கும் அதிகமான துணை ராணுவப்படை வீரர்கள் ஈடுபட உள்ளனர். 12
ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் கண்காணிப்பு
பணிகளில் இறங்க உள்ளன. மக்களவை தேர்தல், ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி மே 12ம்
தேதிவரை 9 கட்டமாக நடைபெறுகிறது. இதற்காக நாடு முழுவதும் 9 லட்சத்து 30
ஆயிரம் வாக்குச்சாவடிகளை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது. மே 16ம் தேதி வாக்கு
எண்ணிக்கை நடக்கிறது. தேர்தலில் மக்கள் பாதுகாப்பாகவும் அமைதியாகவும்
வாக்களிக்க மத்திய உள்துறை அமைச்சகம் பல்வேறு கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை
மேற்கொண்டுள்ளது.
அதில் ஒரு பகுதியாக மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்பு படை, இந்தியாதிபெத் எல்லை பாதுகாப்பு படை, ஆயுதம் தாங்கிய எல்லை பாதுகாப்பு படை மற்றும் அசாம் ஆயுதப்படை உள்ளிட்ட பல்வேறு படை பிரிவுகளை சேர்ந்த 2 லட்சத்துக்கும் அதிகமான வீரர்கள் நாடு முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக அனுப்பப்பட்டு உள்ளனர்.
பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீரர்கள் ஒரு மாநிலத்தில் இருந்து அடுத்த மாநிலத்துக்கு செல்ல மத்திய உள்துறை அமைச்சகம் 100க்கும் மேற்பட்ட ரயில்களை ஏற்பாடு செய்துள்ளது. இதில், ஒவ்வொரு ரயிலிலும் படுக்கை வசதியுடன் ஒரு பெட்டியில் 100 வீரர்கள் செல்லக்கூடிய 2 பெட்டிகளை ரயில்வே நிர்வாகம் ஒதுக்கி உள்ளது.
மேலும் 12 ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என்றும், இதனால் நக்சல்கள் மற்றும் சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கண்டறிந்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே தமிழகத்துக்கு மத்திய பாதுகாப்பு படையின் சில பிரிவினர் வந்து விட்டனர். அவர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கூடுதல் பாதுகாப்பு படையினர் வரவுள்ளனர்.
இவர்கள் தமிழகத்தில் உள்ள பதற்றம் அதிகமுள்ள வாக்குசாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.