பொறியியல் படிக்கும் அனைவருக்கும் வேலை கிடைக்க வாய்ப்பில்லை. திறமையை
வளர்த்துக் கொண்டால் மட்டுமே வேலை கிடைக்கும் என
காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழக துணைவேந்தர் பேசினார்.
கடலுார் அடுத்த குமராபுரம் கிருஷ்ணசாமி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் ஒன்பதாவது பட்டமளிப்பு விழா நடந்தது. அண்ணா பல்கலைக்கழக அளவில் சாதனை படைத்த 9 மாணவர்களுக்குப் தங்கப் பதக்கங்களையும், 394 மாணவர்களுக்குப் பட்டங்களையும் வழங்கி காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழக துணைவேந்தர் ஜோசப் துரைராஜ் பேசியதாவது:
படிப்பு வேலைக்குச் செல்வதற்கு மட்டுமல்ல; அது ஏழைகளுக்கும் பயன்பட வேண்டும். தமிழகத்தில் உள்ள 550 பொறியியல் கல்லுாரிகளில் இருந்து ஆண்டுதோறும் 2 லட்சம் மாணவர்கள் பொறியியல் படித்து வருகின்றனர். அனைவருக்கும் வேலை கிடைக்க வாய்ப்பில்லை. திறமையை வளர்த்துக் கொண்டால் மட்டுமே வேலை கிடைக்கும்.
அமெரிக்காவில் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செயற்கை கால் இந்தியாவில் அதே தரத்தில் 3,000 ரூபாய்க்கு கிடைக்கிறது. மஞ்சள் காமாலை நோய் தடுப்பூசி 34 ரூபாய்க்கு கிடைக்கச் செய்வதே காந்திய கல்வியாகும். முடிந்தளவு மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.