தேர்தலுக்கு ரூ.30 ஆயிரம் கோடி செலவு என ஆய்வறிக்கையில் தகவல்


வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்படலாம் என ஆய்வில்
தெரியவந்துள்ளது. மத்திய ஊடக ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்தியாவில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களிலேயே அதிக செலவு ஏற்படுத்தும் தேர்தலாகவும் அமையும் என்று கூறப்பட்டுள்ளது.

தேர்தலை நடத்த 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் கோடி வரை செலவாகும் என்றும், இதில் தேர்தல் ஆணையம் மட்டும் 3 ஆயிரத்து 500 கோடிக்கு மேல் செலவு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணக்கார வேட்பாளர்கள் வெற்றி பெற பணத்தை வாரி இறைப்பது போன்ற காரணங்களால் செலவுத் தொகை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 1996-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு 2 ஆயிரத்து 500 கோடிதான் மொத்த செலவாக செய்யப்பட்டதாகவும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...