தேர்தலுக்கு 5 நாட்களுக்கு முன்பே ஓட்டு சாவடி சீட்டுகளை வீடுவீடாக சென்று வழங்கிவிட வேண்டும்: தேர்தல் கமிஷன் சுற்றறிக்கை



தேர்தலுக்கு 5 நாட்களுக்கு முன்பே ஓட்டு சாவடி சீட்டுகளை வீடுவீடாக சென்று வழங்கிவிட வேண்டும் என்று தேர்தல் கமிஷன்

உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய தேர்தல் கமிஷன் அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை வருமாறு:–
பொதுமக்களுக்கு ஓட்டு சாவடி சீட்டுகளை தேர்தலுக்கு 5 நாட்களுக்கு முன்பே வீடுவீடாக சென்று வழங்க வேண்டும். அச்சிடப்பட்ட புகைப்படத்துடன் கூடிய ஓட்டு சாவடி சீட்டு, ஓட்டு சாவடி அலுவலர் மேற்பார்வையில் வாக்காளர்களுக்கு வினியோகிக்கப்பட வேண்டும்.

ஓட்டு சாவடி சீட்டு தரமான காகிதத்தில் அச்சிடப்பட வேண்டும். அதில் வாக்காளர்களின் புகைப்படம், தெளிவாக இடம் பெறவேண்டும். ஓட்டு சாவடி சீட்டை சம்பந்தப்பட்ட வாக்காளர் அல்லது அவரது வீட்டில் உள்ள வயது வந்தோரிடம் ஒப்படைக்க வேண்டும்.

சீட்டு பெற்றுக்கொண்டதற்கு அடையாளமாக பதிவேட்டில் கையெழுத்து பெற வேண்டும். வாக்காளர் இல்லாமல் வீடு பூட்டி இருந்தாலோ, வீடு மாறி இருந்தாலோ அவரது சீட்டை தனி நோட்டில் ஒட்டி வைக்க வேண்டும்.

வாக்காளர்கள் அன்றைய தினம் வாக்காளர் அடையாள அட்டையுடன் சென்றால் ஓட்டு சாவடி அலுவலர் நோட்டை சரிபார்த்த பிறகு ஓட்டளிக்க அனுமதிக்கலாம். ஓட்டு சாவடி சீட்டு வழங்கப்பட்ட விவரம் அரசியல் கட்சிகளுக்கும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஓட்டுச்சாவடி ஏஜெண்டுகளுக்கும், வேட்பாளரின் ஏஜெண்டுகளுக்கும் வழங்க வேண்டும்.

இந்த சீட்டுகளை மொத்த மாக ஒருவரிடம் ஒப்படைத்து வினியோகிக்க கூடாது. வினியோகிக்கப்படாத சீட்டுகளை உதவி தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ஓட்டுச் சாவடி சீட்டு கிடைக்காதோர் அங்கு வந்து வாங்கிக் கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும்.

சீட்டின் பின்புறம் ஓட்டுச் சாவடிக்குள் கேமரா, செல்போன் போன்றவற்றை எடுத்து செல்லக்கூடாது போன்ற விபரங்கள் அச்சிடப்பட வேண்டும். ஓட்டு சாவடி சீட்டை நகல் எடுத்து வினியோகிக்க கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...