கடும் வறட்சியால், அங்கு வசித்து வந்த ஆயிரக்கணக்கான வவ்வால்கள் இடம் பெயர்ந்து விட்டன.

கோவை மாநகராட்சி உயிரியல் பூங்காவில் நிலவும் கடும் வறட்சியால், அங்கு வசித்து வந்த ஆயிரக்கணக்கான வவ்வால்கள்
இடம் பெயர்ந்து விட்டன. இதனால் பார்வையாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.கோவை வஉசி உயிரியல் பூங்கா மரங்களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வவ்வால்கள் வசித்து வருகின்றன. ஒவ்வொரு வவ்வாலும் 500 கிராம் முதல் 3.5 கிலோ எடை உள்ளவை. பொதுவாக சிறு வவ்வால்களை பார்த்து பழக்கப்பட்ட மக்கள், வ.உ.சி. பூங்கா மரங்களில் தொங்கும் ராட்சத வவ்வால்களை பார்த்து வியக்கின்றனர்.உணவு தேடி வால்பாறை, ஆனைமலை, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வரும் வவ்வால்கள், தங்கள் இருப்பிடங்களை எந்த சூழலிலும் மாற்றாமல் இருந்தன.

ஆனால் சில நாட்களாக உயிரியல் பூங்காவில் நிலவும் கடும் வறட்சியால் மரங்கள் காய்ந்து விட்டது. பசுமை இல்லாததால் வெயிலை தாக்கு பிடிக்க முடியாமல் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வவ்வால்கள் கூட்டம் கூட்டமாக வேறு பகுதிக்கு சென்று விட்டன. தற்போது குறைந்தளவு வவ்வால்களே உள்ளன. இதனால் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். கோவையில் இருந்த வவ்வால்கள் இலங்கையின் தலைமன்னார், அந்தமான் நிகோபர் தீவுகள் வரை பறந்து சென்றுள்ளதாக வவ்வால் ஆய்வாளர்கள் கூறினர். மழை பெய்து மரங்கள் துளிர்த்தால் மீண்டும் வவ்வால்கள் வரத்து அதிகமாகி விடும் என பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...