லோக்சபா தேர்தல் குறித்த அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது: நாட்டின் 16வது லோக்சபாவிற்கான பொதுத்தேர்தல் 9
கட்டங்களாக நடக்க உள்ளது. ஏப்ரல் 7ம் தேதி முதல் கட்ட தேர்தலும், கடைசி, 9ம் கட்ட தேர்தல் மே 12ம் தேதியும் நடக்க உள்ளன. தமிழகத்தில் ஏப்ரல் 24ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. இந்த லோக்சபா தேர்தலில் மொத்தம் 81.4 கோடி வாக்காளர்கள் ஓட்டு போட உள்ளனர். இவர்களில் 10 சதவீதத்தினர் புதிய வாக்காளர்கள் ஆவர். நாடு முழுவதும் மொத்தம் 9,30,000 ஓட்டு பதிவு மையங்கள் செயல்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.