பென்னிகுவிக்கின், 103வது நினைவு தினத்தை முன்னிட்டு, லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணி மண்டபத்தில், விவசாயிகள், மெழுகுவர்த்தி ஏற்றி மரியாதை செலுத்தினர். முல்லைப்பெரியாறு அணை கட்டிய, ஆங்கிலேய
பொறியாளர் பென்னிகுவிக், 1911, மார்ச் 9ல், லண்டனில் இறந்தார். இவரின், 103வது நினைவு தினம், தேனி மாவட்டம், லோயர்கேம்ப்பில் உள்ள பென்னிகுவிக் மணி மண்டபத்தில் அனுசரிக்கப்பட்டது. விவசாயிகள் பலர், பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து, மெழுகுவர்த்தி ஏற்றி
மரியாதை செலுத்தினர். லோயர்கேம்பில், கடந்த ஆண்டு, ஜன., 15ல், 1.25 கோடி ரூபாய் செலவில், பென்னிகுவிக்கிற்கு, மணி மண்டபம் கட்டி, திறப்பு விழா நடத்தப்பட்டது. ஓராண்டு ஆன நிலையில், ஜன., 15ல், அரசு சார்பில், பென்னிகுவிக் பிறந்தநாள் விழாவுக்கு ஏற்பாடு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.