மத்திய பல்கலை.யில் சேர பொது நுழைவுத்தேர்வு

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் உட்பட 7 மத்திய பல்கலைக்கழகங்கள் இணைந்து 2014-15ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வை நடத்துகின்றன. பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள், ஒருங்கிணைந்த 5 ஆண்டுமுதுகலை பட்டம் படிப்பதற்கு இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் இயற்பியல், வேதியியல், கணிதம், பொருளியல் மற்றும் லைஃப் சயின்ஸ் பாடப்பிரிவுகளில் ஒருங்கிணைந்த 5 வருட முதுகலை பட்டப்படிப்பு உள்ளது.இது தவிர பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் நேரடியாக நான்கு ஆண்டு B.A, BEd, BSc, BEd போன்ற ஆசிரியர் பயிற்சி படிப்புகளை படிக்கலாம்.

இந்த ஆசிரியர் பயிற்சிப் படிப்புகள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, பொருளியல், இயற்பியல், வேதியியல், வணிகவியல் மற்றும் லைஃப் சயின்ஸ் பாடப்பிரிவுகளில் வழங்கப்படுகிறது.இளநிலை பட்டம் முடித்தவர்கள் ஓர் ஆண்டு ஆசிரியர் பயிற்சி படிப்பை படிக்கலாம்.

மேலும் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி போன்ற பாடப்பிரிவுகளில் இரண்டு ஆண்டு முதுகலை பட்டப்படிப்பும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ளது. ஆ.ஹ மீடியா & கம்யூனிகேஷன், ஆ.ஹ சமூக பணி பாடப்பிரிவிற்கும் விண்ணப்பிக்கலாம். தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல் மற்றும் லைஃப் சயின்ஸ் பாடப்பிரிவுகளில் முனைவர் பட்டப்படிப்பிற்கும் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். இந்தியா முழுவதும் நடத்தப்படும் இந்த பொது நுழைவுத்தேர்வு தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருவாரூரில் நடைபெற உள்ளது.

மேலும் இந்த பொது நுழைவுத் தேர்வு குறித்து அறிய மற்றும் விண்ணப்பிக்க www.cucet2014.co.in என்ற இணைய முகவரியை பார்க்கலாம். 9489054256, 9489054270 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...