சென்னையில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் வகையில் வழிப்புணர்வு பிரசாரத்தை தீவிரப்படுத்த சிறப்பு
தேர்தல் பார்வையாளராக மூத்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி நாகு நியமிக்கப்பட்டுள்ள்ளார். 2009 மக்களவை தேர்தல் 2011 சட்டபேரவை தேர்தலில் சென்னை தவிர இதர மாவட்டங்களில் சராசரியாக 65 முதல் 70% கும் மேல் வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால் சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டபேரவை தொகுதிகளிலும் கடந்த தேர்தல்களில் 60%-க்கும் குறைவாகவே வாக்குபதிவாகி உள்ளன.
இதனை அடுத்து மக்களவை தேர்தலில் வாக்கு பதிவு சதவீதத்தை அதிகரிக்க தலைமை தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதையடுத்து தமிழக தேர்தல் வரலாற்றிலேயே முதல் முறையாக பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மூத்த பெண் ஐ.எ.எஸ். அதிகாரியாக நாகு சென்னை மாவட்டத்துக்கான சிறப்பு தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்படுள்ளார். பதற்றம் நிறைந்த வாக்கு சாவடிகள், தேர்தல் பாதுகாப்பு, மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் செயல்பாடு அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டுளள் பாதுகாப்பு அறைகள் செய்தி ஊடக மையம் ஆகிய இடங்களை தேர்தல் பார்வையாளர் பார்வையிட்டார். இதன்பின் வாக்காளர் அடையாள அட்டை தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து வாக்கார்களிடையே அவர் கேட்டறிந்தார். சென்னையில் ஒருங்கினைந்த பிரசார நடவடிக்கையை மேற்கொள்ள 100 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.