வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ். படிப்பு காலத்தின் கட்டாயமா?


* இந்தியாவில் ஏராளமான மருத்துவ கல்லூரிகள் உள்ளபோது, வெளிநாட்டுக்கு சென்று எம்.பி.பி.எஸ். படிக்க வேண்டிய அவசியம் என்ன?

140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில்

வெறும் 500 மருத்துவ கல்லூரிகள் மட்டுமே உள்ளன. இங்கு வருடத்திற்கு 50 ஆயிரம் மாணவர்களை மட்டுமே சேர்க்க முடியும். இந்தியாவில் 1700 பேருக்கு ஒரு டாக்டர் மட்டுமே பணியில் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இது வளர்ந்த நாடுகளில் வேறுபடுகிறது. அங்கு 35 பேருக்கு ஒரு டாக்டர் பணியில் உள்ளார். இந்தியாவில் வருடத்துக்கு 15 லட்சம் என்றளவில் டாக்டர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. மேலும் டாக்டருக்கு படிக்க இங்கு போட்டியும், பணச்செலவும் அதிகம் என்பதால் இந்திய மாணவர்கள் வெளிநாடு சென்று மருத்துவம் படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

* லட்சக்கணக்கில் செலவழித்து வெளிநாட்டில் எம்.பி.பி.எஸ். படித்தவர்களுக்கு இந்தியாவில் என்ன எதிர்காலம் உள்ளது?

லட்சக்கணக்கில் என்றில்லை. நடுத்தர வர்க்கத்தினரும் எம்.பி.பி.எஸ். படிக்க வேண்டும் என்பதே எங்களது கொள்கை. இந்தியாவில் மருத்துவ படிப்பு முடித்த ஒரு மாணவர் உயர்படிப்புக்கு வெளிநாடு செல்ல வேண்டிய நிலையே உள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் மருத்துவ கல்வியின் தரம் மிக அதிகம் தான். ஆனால் அங்கு மருத்துவம் படிக்க குறைந்தது ஒரு கோடிக்கு மேல் செலவாகும். இதனால் தான் குறைந்த கல்விக் கட்டணத்தில் மருத்துவக் கல்வி வழங்கக் கூடிய நாடுகளான ரஷ்யா, சீனா, பிலிப்பைன்ஸ், ஜார்ஜியா, உக்ரேன், ருமேனியா போன்ற நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து மாணவர்கள் செல்கின்றனர். இங்கு படித்தவர்களுக்கு இந்தியாவில் நல்ல எதிர்காலம் இருப்பது நிதர்சனமான உண்மை.

* சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் குறைந்த செலவில் எம்.பி.பி.எஸ் படிக்கலாம் என ஏராளமான பல்கலைக்கழகங்கள் தோன்றியுள்ளன. அவற்றை விட பிலிப்பைன்ஸ் கல்வி நிறுவனம் எதில் சிறந்தது?

உண்மை தான். சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் ஏராளமான மருத்துவ பல்கலைக்கழகங்கள் உள்ளன. இங்கு செலவும் குறைவு தான் என்பதையும் மறுக்க முடியாது. ஆனால் அங்கு படிக்க செல்லும் மாணவர்கள் முதல் இரண்டு வருடங்கள் அவர்களது தாய்மொழியை கற்றேயாக வேண்டும். இந்திய மாணவர்கள் ரஷ்யா, சீனா போன்ற நாடுகளின் குளிரை தாங்க முடியாது. வெப்ப மண்டல நாடுகளில் வரும் நோய்களுக்கும், குளிர் பிரதேச நாடுகளில் வரும் நோய்களுக்கும் வித்தியாசம் உண்டு.

அந்த நாடுகளில் கொசுவே கிடையாது. அதனால் கொசுவால் பரவும் நோய்களான டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் கிடையாது. எனவே அங்கு படித்த மாணவர்கள் இந்தியா வரும் போது நோயின் தன்மை தெரியாமல் சிரமப்படுவார்கள். அதனால் தான் இந்திய கலாசாரம், தட்பவெப்ப நிலை கொண்ட ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படிப்பதை நாங்கள் சிபாரிசு செய்கிறோம். இங்கு குறைந்த செலவில் உலக தரத்தில் மருத்துவம் படிக்க முடியும்.

* தமிழகத்தில் டாக்டருக்கு படித்தவர்களுக்கும், வெளிநாட்டில் டாக்டர் பட்டம் பெறுபவர்களுக்கு என்ன வித்தியாசம்?

ஒவ்வொரு நாட்டிலும் மருத்துவ படிப்பின் காலம் வேறுபடும் அவ்வளவுதான். பிலிப்பைன்ஸ் நாட்டில் இந்தியாவை போலவே ஐந்தரை வருட படிப்பு. இதுவே சீனா உள்ளிட்ட நாடுகளில் ஒரு வருடம் அதிகம். பிலிப்பைன்ஸ் படிக்கும் மாணவர்கள், அவர்களது படிப்பு காலத்திற்கு இடையே அமெரிக்க அரசால் நடத்தப்படும் USMLE ( United States Medical Licensing Examination) ஸ்டெப் 1 மற்றும் ஸ்டெப் 2 தேர்வு எழுத முடியும். இதில் தேர்ச்சி பெற்று அமெரிக்காவில் கல்வி உதவித்தொகையுடன் உயர் கல்வியும், டாக்டர்களாகவும் பரிணமிக்கும் வாய்ப்பு அதிகம்.

* இங்கு பள்ளி படிப்பில் அதிக மதிப்பெண் பெற்று உங்களது நிறுவனத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரும் மாணவருக்கு அவரது படிப்பு முடியும் வரை எந்த வகையில் உதவுகிறீர்கள்?.

எளியோர் வீட்டு குழந்தைகளும் எம்.பி.பி.எஸ். படிக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம். மேல்நிலைக்கல்வி முடித்துவிட்டு டாக்டருக்கு படிக்க வேண்டும் என உறுதியோடு எங்களை நாடுவோருக்கு அனைத்து உதவிகளையும் செய்து தருகிறோம். இந்தியாவில் ஆங்கிலப் பயிற்சியிலிருந்து, பாஸ்போர்ட், விசா, பயண வசதிகள், பிலிப்பைன்சில் தென்னிந்திய உணவுகள், ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி விடுதி வசதி, மாதம் ஒருநாள் நேரடிச் சந்திப்பு என படித்து முடிக்கும் வரை தேவையானவற்றை செய்கிறோம்.

* பாட (subject) ரீதியாக இந்தியாவில் உள்ள மருத்துவ கல்வி நிலையங்களை விட வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் வேறுபட்டுள்ளனவா?.

பொதுவாக உலகம் முழுவதும் பிரிட்டிஷ் பாடத் திட்டம், அமெரிக்க பாடத் திட்டம் என்ற இரண்டு பாடத் திட்டங்கள் மூலம் மருத்துவக் கல்வி கற்றுத் தரப் படுகிறது. பிரிட்டிஷ் பாடத் திட்டத்தில் எம்பிபிஎஸ் பட்டமும், அமெரிக்க பாடத் திட்டத்தில் எம்டி பட்டமும் வழங்கப்படுகிறது. அதாவது இந்தியாவில் எம்பிபிஎஸ் என வழங்கப்படும் மருத்துவப் பட்டம், பிலிப்பைன்சில் எம்டி என வழங்கப்படுகிறது. மற்றபடி பாட ரீதியாக வேறுபாடுகள் கிடையாது.

* உங்களது கல்வி நிறுவனத்தில் பயின்றவர்களுக்கு இந்தியாவில் உள்ள மதிப்பு என்ன?.

மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியாவின் விதி முறைப்படி பிலிப்பைன்சில் மருத்துவம் படிக்க மேல்நிலை கல்வி அறிவியல் பாடங்களில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இங்குள்ளது போலவே நான்கரை வருட படிப்புக்கு பின்னர் ஸ்கிரீனிங் டெஸ்டில் தேர்ச்சி பெற வேண்டும். ஒவ்வொரு வருடமும் மார்ச், செப்டம்பரில் நடக்கும் இந்த தேர்வில் தவோ மருத்துவ பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்கள் 90 சதவீத வரை தேர்ச்சி பெறுகின்றனர். அதன்பின்னர் இங்குள்ள ஒரு மருத்துவ பல்கலையில் பயிற்சி மருத்துவராக ஒரு வருடம் பயிற்சி முடித்து விட்டு அரசு மற்றும் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறலாம். இந்தியாவில் படித்த மாணவருக்கு என்ன அங்கீகாரமோ அதுவே பிலிப்பைன்ஸ் நாட்டில் படித்தாலும் கிடைக்கிறது.

* பிலிப்பைன்ஸ் தவிர மற்ற நாடுகளில் மருத்துவ கல்வி படிக்க உதவுகிறீர்களா. எந்த வகையான உதவி?

மற்ற நாடுகளில் மருத்துவக் கல்வி படிப்பதை விட பிலிப்பைன்சில் மருத்துவக் கல்வி படிப்பது சிறப்பானது என்பதால் நாங்கள் பிலிப்பைன்ஸ் மருத்துவக் கல்வியை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்வதையே முழு நேரப் பணியாக செய்கிறோம்.

* பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படிப்பதில் மாணவர்களுக்கு சாதகமான அம்சங்கள் என்ன?

முதலாவதாக இந்தியாவில் இருந்து 6 மணி நேர பயணத்தில் பிலிப்பைன்ஸ் சென்றுவிடலாம். தட்பவெப்பநிலையும், கலாச்சாரமும் ஒரே மாதிரி இருப்பதால் அங்கு செல்லும் இந்திய மாணவர்களுக்கு தாய்நாட்டில் இருப்பது போன்ற உணர்வே ஏற்படுகிறது. உலகிலேயே அதிகம் ஆங்கிலம் பேசுவோர்களை கொண்ட நாடுகளில், பிலிப்பைன்ஸ் 3வது இடத்தில் இருக்கிறது. இதனால் இந்திய மாணவர்களுக்கு மொழி பிரச்னை என்பது கிடையாது.

அவர்கள் நோயாளிகளிடம் சகஜமாக ஆங்கிலத்தில் பேசி அவர்களது நோயின் தன்மையை புரிந்துகொள்ளலாம். மேலும் இந்தியாவைப் போலவே டைபாய்டு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோய்கள் அங்கும் உள்ளதால் இந்திய நோய்களைப் பற்றியே அவர்கள் அதிகம் படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அது இந்தியாவில் அவர்களுக்கு கைகொடுக்கும். பிலிப்பைன்ஸ் பல்கலையில் படிக்க நன்கொடை, நுழைவு தேர்வு இல்லை. அவர்கள் சந்தோஷமாக பாதுகாப்பாக தங்களது படிப்பில் கவனம் செலுத்தலாம்.

* உங்களது வெற்றியின் பின்னணி என்று எதை நினைக்கிறீர்கள்?

பாளை மேலப்புத்தநேரியில் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து பொறியியல், சட்டம் படிப்பதில் எனக்கேற்பட்ட சங்கடங்கள் அடுத்த தலைமுறைக்கு வரக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். அந்த வழியில் எனது பெற்றோர், மனைவி, சகோதரர் மற்றும் நிறுவன ஊழியர்கள் எனது வெற்றிக்கு உறு துணையாக உள்ளனர்.

* ஒரு கல்வியாளர் என்ற முறையில் இன்றைய கல்வி முறை எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

இன்றைய கல்வி முறை வேலைவாய்ப்பு சார்ந்த கல்வியாக மாற வேண்டும். அதே மாதிரி மாணவர்களின் விருப்பம் சார்ந்த கல்வியாகவும் இருக்க வேண்டும். இதற்கான இன்ஸ்பிரேஷனை எனக்கு தந்தவர் இந்தியாவில் அயல்நாட்டுக் கல்வியின் தந்தையாக மதிக்கப்படும் டாக்டர். டேவிட் கே. பிள்ளை தான். நெல்லை அருகே கயத்தாரில் பிறந்து இன்று ஆயிரக்கணக்கான தமிழக மாணவர்கள் பிலிப்பைன்சில் குறைந்த செலவில் மருத்துவம் கற்க வித்திடுபவர் அவர் தான். ஆகவே அவரோடு இணைந்து செயல்படுகிறோம். மருத்துவப்படிப்பில் உலகில் எந்த மாற்றம் வந்தாலும் அதை அடுத்த நொடியே தனது விரல் நுனிக்கு கொண்டு வருபவர் டாக்டர். டேவிட் கே. பிள்ளை. எனவே தான் அவரை முன்னுதாரணமாக கொண்டு நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...