ஆன்லைன் படிப்புகளுக்கு அதிகளவில் பதிவுசெய்த இந்தியர்கள்

அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி(MIT) மற்றும் ஹாவர்டு பல்கலை ஆகியன இணைந்து,
பல்கலைக்கழக அளவிலான ஆன்லைன் படிப்புகளை வழங்குவதற்காக கடந்த 2012ம் ஆண்டு மே மாதம் தொடங்கிய  edX என்ற திட்டத்தில் சுமார் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் பதிவு செய்துள்ளனர்.
இதன்மூலம் இத்திட்டத்தில் இணைந்துள்ள நாட்டினர்கள் வரிசையில், இந்தியர்கள் உலகிலேயே இரண்டாம் இடம் பெறுகின்றனர். முதலிடத்தில் அமெரிக்க நாட்டினர் உள்ளனர்.
மேற்கண்ட ஆன்லைன் திட்டத்தில் வழங்கப்படும் படிப்புகள், உலகின் சிறந்த பேராசிரியர்களை வைத்து நடத்தப்படுகின்றன. ஒரு மாணவர் இணையதள வசதியைப் பெற்றிருந்தாலே போதுமானது. இப்படிப்புகள் இலவசமானவை.
பொதுவாக, 4 வாரங்கள் முதல் 12 வாரங்கள் வரையிலான காலகட்டத்திலேயே இப்படிப்புகளை முடித்து விடலாம். படிப்பை முடித்தவுடன், அதற்கான சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளலாம்.
இத்திட்டத்தில், உலகெங்கிலும் 196 நாடுகளைச் சேர்ந்த 20 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 6 லட்சம் பேர் அமெரிக்கர்கள். பிரிட்டன் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா 80 ஆயிரம் பேர் மற்றும் சீனாவைச் சேர்ந்த 60 ஆயிரம் பேர் அவர்களுள் அடக்கம்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...