தமிழ்நாடு பார்வையற்றோர் கூட்டமைப்பு சார்பில், இலவச கணினி பயிற்சி முகாம்,
சென்னையில் அடுத்த மாதம், நடக்க உள்ளது. தமிழ்நாடு பார்வையற்றோர் அமைப்பின் சார்பாக, பணிபுரியும், பார்வையற்ற
பெண்களுக்கு, மூன்று மாத, இலவச கணினி பயிற்சி, அளிக்கப்பட உள்ளது. ஆசிய பார்வையற்றோர் ஒன்றியம், அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளோடு இணைந்து, இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. ஏப்ரல், 1 முதல், ஜூன் 30 வரை, சனி, ஞாயிற்று கிழமைகளில், பயிற்சி அளிக்கப்படும். 21 - 40 வயது வரை உள்ள பெண்கள், பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். விரும்புபவர்கள், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், பேசும் தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 944454 49865, 89257 67989 ஆகிய அலைபேசி எண்களில், தொடர்பு கொள்ளலாம்.