ஓட்டு போடுவது எப்படி: புதிய வாக்காளர்களுக்கு விளக்கம்


முதல்முறையாக தேர்த லில் ஓட்டு போடுபவர்களுக்கு மின்னணு இயந்திரத்தை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து விளக்கும் வகையில், சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில்,
செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. லோக்சபா தேர்தலுக்கு, வயது தகுதியுடையவர்களை வரும் 25ம் தேதி வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து உள்ளது.
அதன்படி, பட்டியலில் புதிதாக இடம் பெற உள்ள முதல்முறையாக தேர்தலில் ஓட்டு போடும் இளம் வாக்காளர்களுக்கு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை எப்படி பயன்படுத்துவது என்று விளக்க சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரி உட்பட 10க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இந்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மண்டல அலுவலகங்களிலும், ஷாப்பிங் மால்கள், கோயம்பேடு பேருந்து நிலையம், மெரீனா கடற்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இந்த செயல்முறை விளக்கம் நடைபெற உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...