வாக்காளர் பட்டியலில், இதுவரை பெயர்
சேர்க்காதவர்களுக்கு, கடைசி வாய்ப்பு, நாளை அளிக்கப்படுகிறது. இதற்காக,
வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.
ஓட்டுப் பதிவு:
லோக்சபா தேர்தலுக்கான முதல் கட்ட ஓட்டுப்பதிவு, அடுத்த மாதம், 7ம் தேதி துவங்குகிறது. தமிழகத்தில், அடுத்த மாதம் ஒட்டுப்பதிவு நடக்கிறது.
இதையொட்டி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, கடைசி வாய்ப்பாக, நாளை
சிறப்பு முகாம், தமிழகம் உட்பட நாடு முழுவதும் நடக்கிறது.இதை பொதுமக்கள்
பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
இதற்காக, அனைத்து ஓட்டுச்சாவடிகளில், நாளை காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00
மணி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
நடைபெறவுள்ளது. ஓட்டுச்சாவடி மையத்தில், வாக்காளர் பட்டியல் பார்வைக்கு
வைக்கப்படுவதுடன், அங்கு பணியிலிருக்கும் அலுவலர்கள் எழுதப் படிக்கத்
தெரியாதவர்களுக்கு படித்துக்காட்டுவர். வாக்காளர் அடையாள அட்டை
வைத்திருந்தாலும், தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா
என்பதை உறுதி செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.