காலில் விழுந்து, கெஞ்சி பிரசாரம்: ஓட்டு போட பணம் வாங்காதீங்க!

பணம் பெற்று, ஓட்டு போடாதீங்க!' என்ற கோஷத்தை முன்னிறுத்தி, வாக்காளர் காலில் விழுந்து, விழிப்புணர்வு பிரசாரம் செய்து, பரபரப்பை ஏற்படுத்தினர், 'சத்யாகிரஹா' அமைப்பினர். இதே அமைப்பினர், கடந்த, பல தேர்தல்களில், இத்தகைய விழிப்புணர்வு பிரசாரத்தை தொடர்ந்து
மேற்கொண்டு வருகின்றனர். இப்போது, லோக்சபா தேர்தலுக்காக, மீண்டும், வாக்காளர்கள் காலில் விழும், விழிப்புணர்வு பிரசாரத்தை, சென்னையில் நேற்று துவக்கினர்.
இதை, தமிழக, இணை தலைமைத் தேர்தல் அதிகாரி, சிவஞானம் துவக்கினார். சத்யாகிரஹா அமைப்பைச் சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோர், ஆண், பெண் என, அனைத்து தரப்பினரிடமும், துண்டு பிரசுரங்களை கொடுத்து, காலில் விழுந்து வணங்கி, 'பணம் பெற்று, ஓட்டு போடாதீர்கள்!' என, வாக்காளரிடம் வலியுறுத்தினர். இதை சற்றும் எதிர்பாராதவர்களில் பலர், 'கண்டிப்பாக, ஓட்டுக்கு, பணம் வாங்க மாட்டோம்!' என, உறுதியளித்தனர்.

அமைப்பின் நிறுவன தலைவர், ராமகிருஷ்ண சாஸ்திரி கூறியதாவது: 'பணம் பெற்று ஓட்டு போடக் கூடாது; லஞ்சம், ஜாதி, வன்முறைக்கு அப்பாற்பட்டு, தகுதியான வேட்பாளருக்கு ஓட்டளியுங்கள்!' என, கூறி, வாக்காளர்களின் காலில் விழுந்து வேண்டுகோள் விடுத்தோம். பலரும் மனமாற்றம் அடைந்துள்ளனர் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எங்களின் விழிப்புணர்வு பிரசாரத்தை, சென்னையில், மூன்று நாட்கள் நடத்துவோம். பின், மற்ற மாவட்ட வாக்காளர்களை சந்திப்போம். எங்கள் அமைப்பில், பெரும்பாலானோர் கல்லூரி மாணவர்கள் தான் உள்ளனர். தமிழகம் முழுவதும், 5,000 மாணவர்கள் எங்கள் அமைப்பில் உள்ளனர். தேர்தல் முடிந்த பின், சிறைச் சாலைகளுக்கு சென்று, கைதிகளின் காலில் விழுந்து, மனமாற்றத்தை ஏற்படுத்துவோம். இவ்வாறு, அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...