''கட்சிகளின், இணையதளங்களில், தேர்தல் பிரசாரத்திற்கு தடையில்லை;
ஆனால், சமூக வலைதளங்களில், பிரசாரம் செய்ய, கட்சிகள், தேர்தல் கமிஷனில்
அனுமதி பெற வேண்டும்,'' என, தமிழக
தேர்தல் அதிகாரி, பிரவீன்குமார் கூறினார்.
தமிழகத்தில், லோக்சபா தேர்தல், அடுத்த மாதம், 24ம் தேதி நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான, 5ம் தேதியில் இருந்து, தேர்தல் நடத்தை விதி, அமலுக்கு வந்துள்ளது. 'பேஸ்புக்' மற்றும் 'யுடியூப்' போன்ற சமூக வலைதளங்களில், அ.தி.மு.க.,வினர், பிரசாரம் செய்ய உள்ளதாக, தேர்தல் கமிஷனுக்கு புகார் வந்தது. இது குறித்து விளக்கம் கேட்டு, 9ம் தேதி, அ.தி.மு.க., விற்கு, தேர்தல் கமிஷன் சார்பில், கடிதம் அனுப்பப்பட்டது. பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த, பேனர்களை அகற்றவும், சுவர் விளம்பரங்களை அழிக்கவும், அரசியல் கட்சியினருக்கு, மூன்று நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. அதன் பிறகும், அகற்றாத கட்சிகள் மீது, வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. மறுநாள், அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீன்குமாரை சந்தித்து, விளக்கம் அளித்துள்ளனர்.
இது குறித்து, பிரவீன்குமார் கூறியதாவது: அரசியல் கட்சிகள், அவற்றுக்கு சொந்தமான இணைய தளங்களில், தேர்தல் பிரசாரம் செய்யலாம். ஆனால், சமூக வலைதளங்களில், பிரசாரம் செய்ய, தேர்தல் கமிஷனிடம், அனுமதி பெற வேண்டும். பொதுக்கூட்டங்களில் நடை பெறும் நிகழ்வுகள் முழுவதும், வீடியோவில் பதிவு செய்யப்படும். பொதுக்கூட்டம் நடத்த, சம்மந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம், அனுமதி பெற வேண்டும். மேடை அமையும் இடத்தில் இருந்து, 100 மீட்டர் சுற்றளவிற்கு, கூட்டம் துவங்க, 12 மணி நேரத்திற்கு முன், கொடிகள் கட்டலாம். கூட்டம் முடிந்த, ஐந்து மணி நேரத்திற்குள், அவற்றை அகற்றிவிட வேண்டும். அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கை, தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்படும்; அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை, ஏற்கனவே, அனுப்பப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில், தேர்தல் விதி மீறல் உள்ளதா என, தேர்தல் கமிஷன் முடிவு செய்யும். ஆரணி தொகுதியில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அகற்றப்பட்டதாக, முன்னாள் மத்திய அமைச்சர், ஏ.கே.மூர்த்தி, புகார் கொடுத்துள்ளார். அது, அரசு இடத்தில், அனுமதியின்றி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது; இது தொடர்பாக, கலெக்டரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார். தமிழகம் முழுவதும், நான்கு நாட்களில், 13 ஆயிரம், தேர்தல் விதி மீறல் வழக்குகள், பதிவு செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில், மாநிலம் முழுவதும், பொது இடங்களில், சுவர் விளம்பரம் செய்தது; போஸ்டர் ஒட்டியது; பேனர் வைத்தது என, 8,435 வழக்குகள், பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தவிர, தனியார் கட்டடங்களில், விளம்பரம் செய்ததாக, 4,602 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பேஸ்புக், யுடியூப் இணையதளங்களுடன், 'ட்விட்டர்' மற்றும், 'வாட்ஸ்அப்' போன்ற சமூக வலைதளங்களை, மொபைல் போன் மற்றும் இணையதள வசதி கொண்ட, கம்ப்யூட்டர்களில், ஏராளமானோர் பயன்படுத்தி, தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.

வீடியோவில் பதிவு:

குவியும் தகவல்கள்: