சூரிய ஒளி மின்சாரத்தால் ஒளிரும் அரசுப் பள்ளி! சு. வீரமணி


சூரிய ஒளி மின்சாரம் மூலம் மின்சார வசதி பெற்றுள்ளது மயிலாடுதுறை அருகே உள்ளே கொருக்கை அரசு உயர்நிலைப் பள்ளி


நாகப்பட்டினம் மாவட்டம் மணல்மேட்டுக்கு அருகிலுள்ள கொருக்கை அரசு உயர்நிலைப் பள்ளியில் சோலார் தகடுகள் மூலம் மின்சாரம் பெறப்பட்டு பள்ளியிலுள்ள மின் சாதனங்கள் அனைத்தும் சூரிய மின்சாரத்தின் மூலமே இயக்கப்படுகின்றன. தமிழகத்திலேயே முதல் முறையாக இந்த அரசுப் பள்ளியில்தான் சோலார் தகடுகள் மூலம் மின்சாரம் பெறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது கொருக்கை அரசு உயர்நிலைப் பள்ளி. மிகவும் பின்தங்கிய கிராமத்தில் அமைந்துள்ள இப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்புவரை உள்ளது. 317 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

பள்ளிக்கு சோலார் மின்சாரம் பெறும் முயற்சி வெற்றி பெற்றது குறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜசேகர் விவரிக்கிறார்:

எங்கள் பள்ளி அமைந்துள்ள பகுதி குக்கிராமம். எனவே இங்கு தொடர்ந்து மின் விநியோகம் இருப்பதில்லை. மரங்கள் முறிந்து விழுந்தும் அடிக்கடி மின்சாரம் தடைப்பட்டுவிடும். இதனால் பள்ளி மாணவர்களுக்கு சரிவர பாடம் நடத்த முடியாத சூழல் இருந்தது. இந்த நேரத்தில்தான், நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஒரு காவல் நிலையம் முழுவதும் சூரிய ஒளி மின்சாரத்தால் இயங்குவதை அறிந்தேன். நாமும் ஏன் அதுபோன்று முயற்சி செய்யக்கூடாது என்கிற எண்ணம் தோன்றியது.

எனவே இதுகுறித்து பல தன்னார்வலர்களிடம் வலியுறுத்த ஆரம்பித்தேன். எங்கள் பள்ளியின் முன்னாள் மாணவி வசந்தி கண்ணன் மற்றும் பொன்மனம் அரிமா சங்கத்தை சேர்ந்த கண்ணன் ஆகியோரின் உதவியுடன் சென்னை பொன்மனம் அரிமா சங்கத்தின் உதவியுடன் இங்குள்ள வகுப்பறைகளுக்கு மின்சாரம் பெறுவதற்கு அனுமதி பெற்றோம். ஆனால் இந்தக் குக்கிராமத்தில் உள்ள பள்ளிக்கு இது போன்ற சோலார் தகடுகளை பொருத்தினால் சரியாகப் பராமரிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினர். எங்கள் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊர் மக்களின் உறுதியைக் கண்டு இந்தப் பணியை மேற்கொள்ள முன்வந்தனர்.

அதன் பின்னர் 2.5 கிலோவாட் மின்சாரம் பெறும் திறனுடன் சோலார் தகடுகள் பொருத்தப்பட்டன. இதனால் எங்கள் பள்ளியில் உள்ள வகுப்பறைகள் ஒவ்வொன்றிலும் மூன்று மின்விசிறிகள், மூன்று மின்விளக்குகள் மற்றும் கணினி ஆகியவை இயக்கப்படுகின்றன.

சோலார் தகடுகள் மூலம் மின்சாரம் பெறப்பட்ட பிறகு எங்களுக்கு பல வேலைகள் எளிதாகி இருக்கின்றன. மாணவர்கள் அதிக அளவில் பயன் பெறுகிறார்கள்" என்று பெருமையுடன் குறிப்பிடுகிறார் தலைமை ஆசிரியர் ராஜசேகர்.

முன்பெல்லாம் மின்சாரம் இல்லாத சமயங்களில் பவர் பாயிண்ட் பிரசன்டேஷன் மூலமோ அல்லது கம்ப்யூட்டர் மூலமோ மாணவர்களுக்கு பாடம் எடுக்க முடியாது. இப்போது அந்தச் சிரமம் எல்லாம் இல்லாமல் போய்விட்டது. முன்பெல்லாம் மாதம் ரூ.1,500 ரூபாய் வரை மின்கட்டணம் செலுத்திக் கொண்டிருந்தோம். இப்போது வெறும் 300 ரூபாய் மட்டுமே செலுத்திக் கொண்டிருக்கிறோம்.

கிராமப்புறப் பள்ளி என்பதால் இங்குள்ள மாணவர்களின் வீடுகளில் படிப்பதற்கு ஏற்ற சூழல் இருக்காது. இதனால் மாணவர்கள் தன்னார்வமாக பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் உதவியுடன் பள்ளிக்கு வந்து இரவு 9 மணி வரை படித்துவிட்டுச் செல்வார்கள். இது போன்ற நேரங்களில் சோலர் மின்சாரம் மிகுந்த உதவியாக இருக்கிறது" என்று கூறும் தலைமை ஆசிரியர் ராஜசேகர், தங்களது அனைத்து முயற்சிகளுக்கும் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் கிராம மக்கள் உதவியாக இருந்ததனால் இந்த முயற்சி சாத்தியமானது என்கிறார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...