மானாடிக் கொண்டும், மயிலாடிக் கொண்டுமல்லவா இருந்தோம்?

பலரும் ‘நிமிர்ந்து நில்’ படத்தைப் பற்றி என்னிடம் பேசினார்கள். நானும் அந்தப் படத்தைப் பார்த்தேன். சகோதரர் சமுத்திரக்கனி திரையில்
காட்டியிருப்பது அத்தனையும் நிஜம். இங்கே நேர்மையாக இருப்பது என்பது சாதாரணமான விஷயமல்ல. மதுரையில் நான் கலெக்டராக இருந்த சமயத்தில், கிரானைட் முதலைகளைப் பற்றி விவசாயிகள் என்னிடம் புகார் செய்தார்கள். அவர்களிடம் நான், ‘தயவுசெய்து இன்னும் 15 நாட்கள் பொறுத்துக்கொள்ளுங்கள். இந்த விஷயத்தில் நான் இப்போது தலையிட்டால், உடனடியாக என்னை மாற்றிவிடுவார்கள். இந்த மாவட்டத்தில் உள்ள இரண்டு கிராமங்களுக்கு செய்ய வேண்டிய சில விஷயங்கள் இருக்கிறது. அதைச் செய்து முடித்ததும் நடவடிக்கையில் இறங்குகிறேன்’ என்று சொன்னேன். அவர்களிடம் சொன்னபடி, 15 நாட்களுக்குப் பிறகு நான் நடவடிக்கையில் இறங்கினேன். அடுத்த ஒரு வாரத்தில் எனக்கு மாறுதல் வந்துவிட்டது. இதுதான் இங்கே கிடைக்கும் நேர்மைக்கான பரிசு.
செத்தவனை தமிழனாகப் பார்க்க வேண்டாம். அவன் தெலுங்கனாக இருந்தாலும் மலையாளியாக இருந்தாலும் என் நெஞ்சம் துடிக்கும். எல்லோரும் மனுஷங்கதானே!’ என்று படத்தில் ஒரு வசனம் வரும். அதுதான் என் எண்ணமும். அங்கே கொத்து கொத்தாக மனிதர்கள் செத்துக்கொண்டிருந்த சமயத்தில், நாம் இங்கிருந்து மானாடிக்கொண்டும் மயிலாடிக்கொண்டும் அல்லவா இருந்தோம். அந்த வேதனையை யாரிடம் சொல்வது?!
- சகாயம், ஐ.ஏ.எஸ்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...