பாலியல் துன்புறுத்தல் செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு பெண் விரிவுரையாளர் பணியில் இருந்து பணி விடுவிப்பு

பணி விடுவிப்பை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தனியார் கல்லுாரியின் பெண் விரிவுரையாளர் மனுத்தாக்கல் செய்துள்ளார். மனுவுக்குப் பதிலளிக்கும்படி அரசுக்கும், கல்லுாரி நிர்வாகத்துக்கும் "நோட்டீஸ்" அனுப்ப, உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை லயோலா கல்லுாரியில், விரிவுரையாளராக பணியாற்றிய பெண் ஒருவர் அதே கல்லுாரியில், தமிழ் துறையில் பணியாற்றுபவர்களுக்கு எதிராக, பாலியல் துன்புறுத்தல் புகார் கூறினார். உயர் நீதிமன்றத்தில், பெண் விரிவுரையாளர், தாக்கல் செய்த மனு:
பாலியல் துன்புறுத்தல் செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தேன். உயர் நீதிமன்றமும், இம்மாதம், 6ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், என்னை பணியில் இருந்து விடுவித்து, கல்லுாரி நிர்வாகம் உத்தரவிட்டது.
அந்த உத்தரவில், எந்த காரணங்களையும் தெரிவிக்கவில்லை. இயற்கை நியதி பின்பற்றப்படவில்லை. எனவே பணியில் தொடர, கல்லுாரி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும். பணி விடுவிப்பை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு நீதிபதி நாகமுத்து முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் ஆஜரானார். மனுவுக்கு, ஒரு வாரத்தில் பதிலளிக்கும்படி, அரசுக்கும், லயோலா கல்லுாரியின் செயலருக்கும், "நோட்டீஸ்" அனுப்ப நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...