கணிதப் புலிகள்: பைதாகரஸ்முதன்முதலாக குருகுல முறையில் பள்ளி என்ற அமைப்பை ஏற்படுத்தி, அறிவைப் பரப்பிய
மேதை பைதாகரஸ் (பிதாகரஸ் என நீங்கள் படித்திருப்பீர்களே அவரேதான்). இத்தாலி நாட்டின் அந்த நாளைய நகரமான 'சாமோஸ்’ என்ற இடத்தில், கி.மு.569-ல் பைதாகரஸ் பிறந்தார். இவரது தந்தை ஒரு வியாபாரி. அவருடன் பல இடங்களுக்குச் சென்று உலக அறிவை வளர்த்துக்கொண்டார் பைதாகரஸ். தேல்ஸ் மற்றும் அனாக்ஸிமான்டர் என்ற அறிஞர்களிடம் கல்வி பயின்றார். எகிப்துக்குச் சென்று பல கலைகளைக் கற்றார். தானே ஒரு பள்ளி அமைப்பை 'அரைவட்டம்’ என்ற பெயரில் தொடங்கினார். குருகுல முறையில் சீரும் சிறப்புமாக அந்தப் பள்ளி இயங்கியது. ஆங்கே ஆண், பெண் இரு பாலரும் பாடம் பயில, பைதாகரஸ் வழிவகுத்தார். உலகிலேயே முதன்முதலில் பெண்களுக்கு சம உரிமை வழங்கி, அவர்களைக் கல்வி கற்கச் செய்த பெருமை இவரையே சாரும்.