ு? வார்த்தைகளில்லாமல் தகவல் தெரிவிப்பது என்று நீங்கள் சாதாரணமாக நினைக்கும் உடல்மொழி(பாடி லாங்வேஜ்) தலைமைப்பண்புக்கான ஒரு முக்கிய கருவி என்பது. ஆம்! வெறுமனே தகவல் தொடர்பு என்பதை தாண்டி சலிப்பு, வெறுப்பு,
அவநம்பிக்கை, சந்தோஷம், கோபம் என பல உணர்வுகளை, மனித மனநிலையை வெளிப்படுத்தும் உடல்மொழி தான் உங்கள் வெற்றிக்கான சாவியும் கூட. மனித மனங்களை வாசிக்க அதிகம் உதவும் உடல்மொழி என்பது வேறு ஒன்றுமில்லை. கண்ணசைவு, உடலசைவு, புன்னகை, முகபாவங்கள் இவை தான்.
குரலின் தொனியும் இதில் சேர்ந்து கொள்ளும். எதிராளியின் மனதை கூறு போட வார்த்தைகள் அவசியம் இல்லை, வசீகரிக்கவும் சொற்களின் அவசியமில்லை, உடல் மொழி ஒன்று போதும். இதையே தான்’’ புரிந்துகொள்ளும் அர்த்தங்களில் 60 லிருந்து 70 சதவீதம் வரை சொல்லிலா நடத்தைகளினாலேயே புரிந்துகொள்ளப்படுகின்றன“
என உறுதியாகக் கூறுகின்றனர் ஆய்வாளர்கள். பல்வேறு வார்த்தைகள் சொல்லமுடியாத விஷயங்களை கூட சிறு உடல் அசைவு உணர்த்திவிடும். உதாரணமாக ஒருவர் பேசும் போது நமது பார்வை வேறொரு புறம் திரும்பி உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தால் எதிராளியின் மீது நமக்குள்ள நம்பிக்கையின்மையை அது வெளிப்படுத்திவிடும். கைகட்டியிருப்பது மரியாதைக்குரிய விஷயமாக இருக்கலாம். ஆனால் கைகட்டி கொண்டு பின்னால் சாய்ந்து தலையை ஒரு பக்கமாக சாய்த்து உட்கார்ந்து பேசுபவரின் கண்களை உற்றுப்பார்ப்பது மரியாதைக்குரிய விஷயமா?
கண்டிப்பாக இல்லை. உன்னை அல்லது நீ பேசுகின்ற வார்த்தைகள் எனக்குப் பிடிக்கவில்லை என்பதற்கான உடல்மொழியாகிவிடும் அது.
வார்த்தைகளால் நாம் சொல்லத் தயங்குகின்ற விஷயங்களையும் உடல்மொழியால் எளிதில் உணர்த்திவிடலாம். இத்தகைய சக்தி வாய்ந்த இந்த கருவியை நம் ஆளுமைப்பண்பை, தலைமைப்பண்பை வளர்க்க எப்படி பயன்படுத்தலாம். இங்கு தான் இருக்கிறது உங்கள் சாமர்த்தியம்.
அ உடல்மொழி என்பது நம்வசமின்றி சிலநேரங்களில் நம்மையறியாமல் வெளிப்பட்டுவிடும். ஆனால் அப்படி வெளிப்படுத்தாமல் உடல்மொழியை உங்கள் கட்டுக்குள் வைப்பதிலிருக்கிறது உங்கள் வெற்றியின் ரகசியம். சில இக்கட்டான நேரங்களில் உங்கள் மனதை அறிய வாய் வார்த்தை தூண்டில் இட முடியாத பொழுதுகளில் உங்கள் உடல் மொழி கவனத்தில் கொள்ளப்படும்.
இது போன்ற சமயங்களில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை எதிராளி உணராத வண்ணம் பார்த்துக்கொள்வதில் இருக்கிறது உங்கள் சமர்த்து.
* பல நன்மைகள் பயக்கும் உடல்மொழியை பயன்படுத்துவதில் கவனம் தேவை. நம்முடைய விரும்பதகாத உடல்மொழியை நாம் வெளிப்படுத்தக்கூடாது. அது நமக்கு நன்மை தராது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
* ஒருவரிடம் புதிதாக அறிமுகமாகும் போது வணக்கத்தோடு புன்னகையும் சேர்ந்து கொள்ளவேண்டும். வணங்காமுடித்தனமாக அலட்சியமாக கைநீட்டாமல் உண்மையிலே அவர்களுடன் நட்பாவது உங்களுக்கு பிடித்திருக்கிறது என்கிற விதத்தில் உங்கள் வணக்கம் அமையும் போது அவர்களை முதல் சந்திப்பிலே நீங்கள் எளிதாக கவர்ந்துவிடலாம்.
* வரவேற்பின் போதும் உடல் மொழியை பக்குவமாக கையாள வேண்டும். நம்மைவிட உயர்ந்தவர்கள் வரும் போது எழுந்து நிற்பது, கார் கதவை திறந்துவிடுவது, வயதில் பெரிய உறவினராக இருக்கும் பட்சத்தில் கால் தொட்டு வணங்குவது, கண்களில் பாசத்தோடு வரவேற்பது இவை அவசியம். இதே போல் மருத்துவமனை, பேருந்து போன்ற பொது இடங்களில் நம் பக்கத்தில் அமர வருபவர்களுக்காக சற்று நகர்ந்து உட்காருவது வெளியிடங்களில் நாம் சுமூகமாக பழக வழி வகுக்கும்.
* வழி அனுப்பும் சமயங்களிலும் எழுந்து நின்று வழி அனுப்புவது, கார் கதவை திறந்து விடுவது இதெல்லாம் உங்கள் மீது அவர்களுக்கு பிரியம் வர நிச்சய காரணமாகிவிடும்.
* எப்போதும் புன்னகையோடு இருங்கள். அதே சமயம் பல்லிளித்தல் என்பார்களே அது கூடாது.
* உங்களுக்குத்தெரிந்த ஒருவர் உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத விஷயத்தைப் பற்றிப் பேசுகிறார் என்றால் வேண்டுமென்றே தலை சொறிவது, கண்களை அலைய விடுவது போல அவர்களை அலட்சியப்படுத்தாமல் அவர்கள் சொல்வதை பொறுமையாக கவனித்து கேளுங்கள்.
* எதிராளியின் கண்களை நேராகப் பார்த்துப் பேசுவது உங்கள் மன உறுதியை வெளிப்படுத்தும்.
* வேலைக்கான இண்டர்வியூவிற்குச் சென்றால் நிமிர்ந்து தைரியமாக உட்காருங்கள்.
உங்கள் திறமையோடு சேர்த்து உங்கள் உடல்மொழியும் கவனத்தில் கொள்ளப்படும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். உடல்மொழியை உங்கள் வசப்படுத்துங்கள். உலகம் உங்கள் வசமாகும்.