உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பரிந்துரை பட்டியலை எதிர்த்த வழக்கு


சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்காக பரிந்துரைக்கப்பட்ட பட்டியலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது 13
நீதிபதிகளுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன.இந்த இடங்களில் 12 இடங்களை நிரப்புவதற்காக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய குழு நீதிபதிகளுக்கான பரிந்துரை பட்டியலை தயார் செய்தது. இந்த பட்டியலில் உள்ளவர்களில் பலர் உரிய தகுதி பெறவில்லை என்று வக்கீல்கள் பட்டியலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்த பட்டியலைத் திரும்பப் பெறக்கோரி வக்கீல் சங்கங்கள் ஆர்ப்பாட்டங்களையும், நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டங்களையும் நடத்தினர். இந்நிலையில், நீதிபதிகளுக்கான பரிந்துரை பட்டியலை திரும்பப் பெறுமாறு உத்தரவிடக்கோரி மூத்த வக்கீல் ஆர்.காந்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பட்டியல் தொடர்பாக எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என்று மத்திய சட்டத் துறைக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி பி.எஸ்.சவுகான் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அவர் அளித்த உத்தரவில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பாக பெயர்கள் பரிந்துரை மட்டுமே செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு ஒப்புதல் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளுக்குப் பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகே அந்த பட்டியல் நிறைவு பெறும். ஆனால், அதற்குள் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே, பட்டியலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று கூறியுள்ளனர்.

நீதிபதிகள் 12 பேர் அடங்கிய பட்டியலைத் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள வக்கீல்கள் 2 முறை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். உயர் நீதிமன்ற வளாகத்தில் தொடர் முழக்க போராட்டமும் நடந்தது. இதையடுத்து, வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் உச்ச நீதிமன்றம் சென்று தலைமை நீதிபதி சதாசிவம், நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா உள்ளிட்டோரைச் சந்தித்து பட்டியலைத் திரும்பப் பெறுமாறு வேண்டுகோள் வைத்தனர். இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி பட்டியலை மத்திய அரசுக்கு திரும்ப அனுப்பியுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து, இந்த பிரச்னை முடிவுக்கு வந்தது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...