போதைப் பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது என அரசு கல்லூரியில் நடந்த விழாவில், டி.எஸ்.பி., பேசினார்.
கடலூர் அரசு பெரியார் கலை மற்றும்
அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். வணிகவியல் துறைத் தலைவர் முருகதாஸ் வரவேற்றார்.
டி.எஸ்.பி., ராமமூர்த்தி, போதை ஒழிப்பு குழுவை துவக்கி வைத்து பேசுகையில், "போதைப் பழக்கம் என்பது மூளையை செயலிழக்க செய்து விடும். போதைப் பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது" என்றார்.
குரோ பிளஸ் டிரெயினிங் அகாடமி செயல் இயக்குனர் ஆறுமுகம், உதவி பேராசிரியர்கள் தாவரவியல் துறை நிர்மல் குமார், ஆங்கிலத் துறை டேவிட் சவுந்தர், மனித உரிமை அமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயபாலன் ஆகியோர் பேசினர். கட்டுரை, எழுத்து, பேச்சுப் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிளுக்கு பரிசு வழங்கப்பட்டது.