சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள மலையாளப்பட்டி கருங்கரடு பகுதியைச்
சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி பெருமாயி. இவர்களது மகள் சங்கீதா (15).
நாமக்கல் மாவட்டம் மங்களபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து
வந்தார். தினமும் பள்ளிக்கு பஸ்சில் சென்று வந்தார். இதே கிராமத்தைச்
சேர்ந்த கந்தசாமியின் உறவினர் இளையான். இவரது மகன் சின்னராஜ் (19). கட்டிட
கூலி தொழிலாளி. கடந்த நவம்பர் மாதம் கந்தசாமி, தனது மகள் சங்கீதாவின்
செல்போனுக்கு 50 ரூபாய் ரீசார்ஜ் செய்து விடுமாறு நம்பரை சின்னராஜிடம்
கொடுத்துள்ளார். அதன்பிறகு சங்கீதாவின் செல்போனுக்கு அடிக்கடி பேசத்
தொடங்கினார் சின்னராஜ். இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனையறிந்த
சங்கீதாவின் பெற்றோர் சின்னராஜை கண்டித்துள்ளனர். இரு குடும்பத்துக்கும்
தகராறு ஏற்பட்டு பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்துள்ளது.
சின்னராஜின் குடும்பத்தினர் புதிதாக வீடு கட்டி வருகின்றனர். கடந்த 31ம் தேதி அதிகாலை எழுந்த சின்னராஜ், புதிதாக கட்டி வரும் வீட்டிற்கு தண்ணீர் ஊற்ற செல்வதாக கூறிச் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் சின்னராஜ் வீட்டுக்கு வரவில்லை. அதே நேரத்தில் சங்கீதாவையும் காணாததால் பெற்றோர் தேடி வந்தனர். இருவரும் ஓடி விட்டதாக ஊரில் தகவல் பரவியது. இந்நிலையில் அன்று மாலை சின்னராஜ் மட்டும் வீடு திரும்பினார். அவரிடம் சங்கீதா எங்கே என பெற்றோர் கேட்டுள்ளனர். ஆனால் அவர் தனக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளார். அவரது பேச்சில் சந்தேகம் அடைந்த அவர்கள் அடித்து மிரட்டி கேட்டுள்ளனர். அப்போது சங்கீதா மலையில் இருப்பதாக கூறி 3 கிலோ மீட்டர் தூரம் கிராம மக்களை அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு திருமனூர் வனப்பகுதி பன்னிபாளி மலையில் சங்கீதா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது கழுத்து மற்றும் உடலில் காயங்கள் இருந்தன. இதைப் பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். சங்கீதாவின் உடலை கிராமத்துக்கு கொண்டு வந்தனர். சங்கீதாவை கொன்றது பற்றி சின்னராஜை கட்டி வைத்து விசாரித்துள்ளனர். அவர் எதுவும் கூறாததால் ஊர் மக்கள் சரமாரி தாக்கி உள்ளனர். நேற்று பகல் முழுவதும் உணவு எதுவும் கொடுக்காமல் அடித்து உதைத்துள்ளனர். மேலும் சின்னராஜின் பெற்றோரையும் கிராம மக்கள் தாக்கி உள்ளனர்.
இதற்கிடையில், சின்னராஜ் நேற்று மாலை பரிதாபமாக இறந்தார். இதுபற்றி போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுக்காமல் சின்னராஜ், சங்கீதாவின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் திட்டமிட்டனர். இதுபற்றி நேற்று இரவு வாழப்பாடி போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று படுகொலை செய்யப்பட்ட 2 பேரின் உடல்களையும் மீட்டனர். இருவரின் பெற்றோரையும் பிடித்துச் சென்று காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். மாணவி மற்றும் சின்னராஜ் கொலை குறித்து கிராம மக்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.