ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பணிகள், நிறைவு பெற்றுள்ளன. ஈ.வி.எம்.,
இயந்திரங்கள் நேற்று, காலை பலத்த பாதுகாப்புடன்,
வாகனங்களில் ஓட்டுச்சாவடிகளுக்கு எடுத்து செல்லப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, மேற்கு, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, சத்தி, மொடக்குறிச்சி, பவானிசாகர் என, எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன.
ஈரோடு லோக்சபா தொகுதி வரையரையில், ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், திருப்பூர் மாவட்டம் காங்கேயம், தாராபுரம் உள்ளிட்ட, ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன.
பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி ஆகியவை திருப்பூர் லோக்சபா தொகுதியுடனும், பவானிசாகர் தொகுதி நீலகிரி தொகுதியுடன் உள்ளன.
ஈரோடு மாவட்டத்தில், 8.67 லட்சம் ஆண், 8.71 லட்சம் பெண் என, 17.39 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
மாவட்ட அளவில், 791 மையங்களில், 1,953 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இதில், 119 பதட்டமான ஓட்டுச்சாவடிகள் ஆகும். 141 மைக்ரோ அப்ஸர்வர்கள், மையங்களை கண்காணிக்க உள்ளனர். 9,370 அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர்.
மாவட்ட போலீஸார், ஆந்திரா, ஒரிசாவின் பாதுகாப்பு படை வீரர்கள், மூன்று கம்பெனியினர், என, 1,800 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 164 வாகனங்களில் ஈ.வி.எம்., இயந்திரங்கள், அந்தந்த ஓட்டுச்சாவடிக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.
பி.எஸ்.என்.எல்., அலுவலர்கள் மூலம், ஓட்டுச்சாவடிகள் ஆன்லைனில் கண்காணிக்கப்படுகிறது.
ஈரோடு லோக்சபா தொகுதியில், 6.52 லட்சம் ஆண், 6.60 லட்சம் பெண் என, 13.13 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 598 மையங்களில், 1,448 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.
இதில், 125 ஓட்டுச்சாவடிகள் பதட்டமானவை. இவற்றை, 124 மைக்ரோ அப்சர்வர்கள் கண்காணிக்க உள்ளனர். 7,114 அரசு அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தலுக்காக, 3,480 கன்ட்ரோல் யூனிட், 3,150 பேலட் யூனிட்கள் மற்றும், 221 பேலட் யூனிட் கூடுதலாக கையிருப்பில் உள்ளன. சட்டசபை தொகுதிக்கு, ஒரு பெல் நிறுவன டெக்னீஷியன் நியமித்துள்ளனர்.
கலெக்டர் மதுமதி தலைமையில், சட்டசபை தொகுதிக்கு ஒரு உதவி தேர்தல் அலுவலர், மூன்று தேர்தல் பறக்கும் படையினர், வெளிமாநில தேர்தல் பார்வையாளர், இரண்டு செலவின பார்வையாளர் கண்காணிப்பில் உள்ளனர். இன்று காலை, ஏழு முதல், மாலை, ஆறு மணி வரை தேர்தல் நடக்கிறது.
கலெக்டர் மதுமதி கூறியதாவது:
தேர்தல் பணிகள், இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஓட்டுச்சாவடிகளுக்கு ஈ.வி.எம்.,கள் சென்று சேர்ந்துவிட்டன. பலத்த பாதுகாப்புக்கு இடையே, அலுவலர்கள் ஓட்டுப்பதிவுக்கு தயாராக உள்ளனர்.
தேர்தல் அமைதியாக நடக்க, அனைத்து ஏற்பாடுகளும் முடுக்கிவிடப்பட்டு உள்ளது.
தேர்தல் குறித்த விழிப்புணர்வை, மக்களிடையே கொண்டு சேர்த்து உள்ளோம். 100 சதவீத ஓட்டுப்பதிவுக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது, என்றார்