வி.ஏ.ஓ.தேர்வுக்கு 10.57 லட்சம் பேர் விண்ணப்பம்

தமிழகத்தில் காலியாகவுள்ள 2 ஆயிரத்து 342 கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு
10.57 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வு ஜூன் 14 ஆம் தேதி நடைபெறுகிறது. காலியாக உள்ள வி.ஏ.ஓ., பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கை கடந்த மார்ச் 17 ஆம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 15 கடைசி நாளாகவும், தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வியாழக்கிழமை (ஏப். 17) கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, தேர்வுக்கு 10 லட்சத்து 57 ஆயிரத்து 601 விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி வி.சோபனா தெரிவித்துள்ளார். விண்ணப்பித்துள்ளவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதா என்ற விவரத்தினை மே முதல் வாரத்தில், தேர்வாணையத்தின் இணையதளத்தில் www.tnpsc.gov.in தெரிந்து கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...