கிளினீங்' பணியில் மாணவர்கள்: ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை


பள்ளிகளில் கழிப்பறை, வகுப்பறை சுத்தம் செய்யும், பணியில் மாணவர்களை ஈடுபடுத்தினால், சம்பந்தப்பட்ட
ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும், என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது. மாநிலம் முழுவதும், அரசு பள்ளிகளில், அடிப்படை பணியாளர் காலி பணியிடம் அதிகரித்து வருவதால், பல்வேறு இடங்களில், மாணவர்கள் பணியாளராகும் அவலம் நீடித்து வருகிறது. கடந்த 25 ஆண்டுக்கு முன்பு, இந்த அடிப்படை பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஓய்வு பெற்ற பணியாளருக்கு, பதில் புதியதாக பணியாளர்கள் நிரப்பபடுவதில்லை. உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் வாயிலாக, அடிப்படை பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். நடுநிலை பள்ளிகளில், சமீபத்தில் 40 சதவீத பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். தொடக்க பள்ளிகளில், 90 சதவீத பணியாளர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால், பல இடங்களில், மாணவர்கள் வகுப்பறைகளை சுத்தம் செய்யும் நிலைக்கு கட்டாயப் படுத்தப்படுகின்ற னர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில், மாணவர்கள், வகுப் பறைகளை சுத்தம் செய்வது குறித்து, படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து பள்ளி கல்வித்துறை சார்பில், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ""பள்ளி மாணவர்களை, வகுப்பறை, டாய்லெட் மட்டுமன்றி, மற்ற வேலைகளுக்கும், பயன்படுத்தினால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'', என கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...