ஒடிஸாவில் 8 பேரவைத் தொகுதிகளில் உள்ள 22 வாக்குச்
சாவடிகளில், வரும் 17ஆம் தேதி மறுவாக்குப் பதிவு நடைபெறும்
என்று ஒடிஸா மாநிலத் தேர்தல் அதிகாரி மோனா சர்மா தெரிவித்துள்ளார்.
வரும் 17ஆம் தேதி 2-ம் கட்டமாக கடலோர, வடக்கு, மத்திய ஒடிஸா பகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதையொட்டி மேற்கண்ட வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடைபெறும் என்று அவர் அறிக்கையொன்றில் கூறியுள்ளார்.
""மல்கான்கிரி மாவட்டம் சித்ரகொண்டா பேரவைத் தொகுதியில் மட்டும் 15 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மறுவாக்குப் பதிவு நடைபெறும் வாக்குச் சாவடிகளில் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரையில் மட்டும் வாக்குப் பதிவு நடைபெறும்.
மல்கான்கிரி, கோரபுட் மாவட்டங்களில் வாக்குச் சாவடி அதிகாரிகளிடம் இருந்து வாக்குப் பதிவு இயந்திரங்களைப் மாவோயிஸ்ட்டுகள் பறித்ததாலும் வேறு சில இடங்களில் இயந்திரங்களுக்கு அவர்கள் தீவைத்ததாலும் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு பாதிக்கப்பட்டது. இன்னும் சில இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவும் வாக்குப் பதிவு தடைப்பட்டது.