'ஸ்மார்ட் போனில்' பிளஸ் 2 தேர்வு முடிவு பார்க்கலாம் இணையதள முகவரிகள் வெளியீடு

வரும், மே 9ல் வெளியாகும், பிளஸ் 2 தேர்வு முடிவை, நான்கு இணையதளங்களில், தேர்வுத்துறை வெளியிடுகிறது;
முகவரிகளை, தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன், நேற்று வெளியிட்டார்.

அதன் விவரம்:
மாணவர்கள், மே 9ம் தேதி காலை 10:00 மணி முதல், www.tnresults.nic.in, www.dge2.tn.nic.in,
www.dge3.tn.nic.in ஆகிய மூன்று இணையதளங்களில், தேர்வு முடிவை பார்க்கலாம். நான்காவதாக, www.dge1.tn.nic.in, என்ற இணையத்திலும், 'ஸ்மார்ட் போன்' மூலம், முடிவைப் பார்க்கலாம்.
* இணையதளத்தில் பார்க்க, தேர்வு பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்ய வேண்டும்.
* தேர்வு முடிவை, மதிப்பெண்களுடன், 0928223 2585 என்ற மொபைல் எண்ணிற்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பி பெறலாம்.
* இதற்கு, TNBOARD/RN/DOB என்பதற்கு ஏற்ப, TNBOARD/ மாணவரின் பதிவு எண் (RN)/ பிறந்த தேதி (DOB) ஆகியவற்றை பதிவு செய்து, எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும்.
* மே 9ம் தேதி காலை 10:00 மணிக்கு முன், எஸ்.எம்.எஸ்., அனுப்பக் கூடாது.
* மாவட்டங்களில் உள்ள, தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நுாலகங்களிலும், கட்டணம் இன்றி தேர்வு முடிவை அறியலாம்.
* மாணவர்கள், தங்களது பள்ளிகளுக்கு, நேரில் சென்றும் தேர்வு முடிவை அறியலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...