'ஓட்டு எண்ணிக்கை முடிய தாமதம் ஏற்படலாம்

''தமிழகத்தில் இந்த முறை, அதிக எண்ணிக்கையில் ஓட்டுகள் பதிவாகி உள்ளதால், மே 16ம் தேதி, இவற்றை எண்ணி முடிக்க,
கால தாமதம் ஏற்படலாம்,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:


தமிழகத்தில் உள்ள அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், நேற்று முன்தினம் அமைதியாக, ஓட்டுப் பதிவு நடந்தது. அன்று நள்ளிரவே, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஓட்டு எண்ணும் மையங்களுக்கு, கொண்டு செல்லப்பட்டன. அவை, அறைக்குள் வைத்து பூட்டப்பட்டு, 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. அறையின் முன்புறம், துணை ராணுவ வீரர்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு, கேமரா பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. இதை அடுத்து, வெளிச் சுற்றாக, உள்ளூர் போலீசார் கண்காணிப்பில் உள்ளனர். தேர்தல் பார்வையாளர், தேர்தல் நடத்தும் அதிகாரி என யார் சென்றாலும், மையத்தின் நுழைவாயிலில் உள்ள நோட்டில் கையெழுத்திட வேண்டும். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட, ஒரு வேட்பாளருக்கு மூன்று ஏஜன்ட்களுக்கும் அனுமதி உண்டு; அவர்கள், 'ஷிப்ட்' முறையில், அங்கு இருக்கலாம். மே 16ல் எண்ணிக்கை: ஓட்டு எண்ணிக்கை, மே 16ல் நடைபெறும். அன்று, ஒரு சட்டசபை தொகுதிக்கு, 14 மேஜை போடப்படும். ஒவ்வொரு மேஜையிலும், ஒரு மேற்பார்வையாளர், மைக்ரோ அப்சர்வர், இரண்டு உதவியாளர் என, நான்கு பேர் இருப்பர். இந்த தேர்தலில், ஓட்டுச் சாவடிகள் மற்றும் வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஓட்டு எண்ணிக்கை முடிய காலதாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில், தபால் ஓட்டுகளும், பின், நேரடி ஓட்டுகளும் எண்ணப்படும். ஒவ்வொரு சுற்று முடிந்ததும், ஓட்டு எண்ணிக்கை விபரம், கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். அதன், 'பிரின்ட்' நகல், அனைத்து வேட்பாளர்களுக்கும் வழங்கப்படும். அதன்பின், அடுத்த சுற்று எண்ணிக்கை துவங்கும். ஒவ்வொரு சுற்று விவரமும், இணையதளத்தில் வெளியிடப்படும். இவ்வாறு, பிரவீன்குமார் தெரிவித்தார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...