கல்லூரியில் மாணவரை தாக்கிய பேராசிரியர்கள் 3 பேர் மீதும் வழக்கு

கல்லூரியில் மாணவரை தாக்கிய மூன்று பேராசிரியர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

திருநெல்வேலி, தருவையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் மாணவர் மெர்வின் பாபு 21.கடந்த 15ம் தேதி கல்லூரியில் அரியர் தேர்வு எழுத போதையில் சென்றிருந்தார். தமது தேர்வு அறையை கண்டுபிடிக்க முடியாததால் அங்கிருந்த கரும்பலகை உள்ளிட்டவற்றை அடித்து சேதப்படுத்தினார். அங்கிருந்த பேராசிரியர்கள் சிலர் அவரை அடித்து உதைத்தனர். அவரது தாயாரை வரவழைத்து மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கி அனுப்பினர்.
தம்மை கல்லூரியில் தாக்கிய ஒரு பேராசிரியரான சுப்பிரமணியன் வீட்டுக்கு மெர்வின் பாபு நண்பர்களோடு இரவில் சென்றார். அவரிடம் சமாதானம் பேச வேண்டும் என கூறி காரில் அழைத்து வந்து மருத்துவக்கல்லூரி திடலில் அவரை கடுமையாக தாக்கினர்.
பேராசிரியரின் தம்பி உள்ளிட்டவர்கள் வந்து அவரை வீட்டுக்கு தூக்கிச்சென்றனர். அவமானம் தாங்காமல், சுப்பிரமணியன் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். மெர்வின் பாபு உள்ளிட்ட ஐந்து மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து விசாரித்த போலீசார், சம்பவத்தன்று மெர்வின் பாபுவுடன் சென்ற மாணவன் தில்லைகுமார் புகாரின் பேரில் பேராசிரியர்கள் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். கல்லூரி அமைந்துள்ள முன்னீர்பள்ளம் போலீசில், பேராசிரியர்கள் இளங்கோ, ஜோசப், இறந்துபோன பேராசிரியர் சுப்பிரமணியன், பரிசோதனைக்கூட உதவியாளர் முருகன், கல்லூரி பஸ் டிரைவர் சுதாகர் ஆகியோர் மீது 147, 323, 342 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
பேராசிரியர் இறந்த வழக்கில் கைதான மெர்வின் பாபு, தில்லைக்குமார் உள்ளிட்ட மாணவர்கள் ஐந்து பேர் நாங்குநேரி இளையோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...