சென்னையில் 4 மணி நேரம் மின்தடை? அரசு அனுமதிக்கு அதிகாரிகள் காத்திருப்பு

மாநிலம் முழுவதும் உள்ள கடும் மின்தடையை தவிர்க்க, சென்னையில் மின்தடை நேரத்தை அதிகரிக்க, மின் வாரிய அதிகாரிகள்
முடிவு செய்துள்ளனர். தற்போது, சென்னையில், தினசரி, சுழற்சி முறையில், இரண்டு மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது. இதை, நான்கு மணி நேரமாக அதிகரிக்கச் செய்ய வேண்டும் என, மின் வாரிய அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். ஆனால், லோக்சபா தேர்தலை காரணம் காட்டி, தமிழக அரசின் உயர் அதிகாரிகள், இதற்கு அனுமதி அளிக்க மறுத்து விட்டனர்.
தமிழகத்தில், கடந்த, 2007 - 08, 2008 - 09ல், பல பன்னாட்டு நிறுவனங்கள் தொழில் துவங்கின. இதனால், 1,000 மெகாவாட் கூடுதல் மின்சார தேவை ஏற்பட்டது. இதனால், இன்று வரை, மின் பற்றாக்குறை நிலவுகிறது. இது, தற்போது, அதிகரித்தும் உள்ளது.

நெருக்கடி:

இதை சமாளிக்க, குறிப்பிட்ட நாளில், 200 - 500 மெகாவாட் மின் பற்றாக்குறை ஏற்பட்டால், கிராம பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது; 500 - 1,000 மெகாவாட் பற்றாக்குறை என்றால், கோவை, ஈரோடு, திருப்பூர், ஓசூர் போன்ற தொழில் நகரங்களில் மின்தடை செய்யப்படுகிறது. பற்றாக்குறை, 1,000 மெகாவாட்டை தாண்டினால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. வல்லூர் இரண்டாவது அலகு, மேட்டூர் மற்றும் வடசென்னை விரிவாக்கம் ஆகிய புதிய அனல் மின் நிலையங்கள்; காற்றாலை போன்றவற்றின் மூலம், 2,500 - 3,000 மெகாவாட் கூடுதல் மின்சாரம் கிடைத்தது. இதனால், சமீபத்தில், மின்தடை நேரம் குறைந்தது. ஆனால், தற்போது, அனல்மின் நிலையங்களில் 1,000 மெகாவாட்; நீர்மின் நிலையங்களில் 1,000 மெகாவாட்; காற்றாலை, 2,000 மெகாவாட் என, 4,000 மெகாவாட் அளவிற்கு, மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. மே மாதம் துவங்குவதற்கு, 20 நாட்களுக்கு முன்னதாகவே, வழக்கத்தை விட, 1,000 - 1,500 மெகாவாட் மின் தேவை அதிகரித்துள்ளது. இதனால், சென்னை தவிர்த்து, மற்ற இடங்களில், 6 - 8 மணி நேரம் வரை, மின்தடை செய்யப்படுகிறது. இது, மற்ற மாவட்ட மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

4 மணி நேரம்:

தற்போது, மின் உற்பத்தி, 11 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. மின் தேவை, 13 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. இதில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் மின் தேவை, 3,000 - 3,500 மெகாவாட். எனவே, மின் பற்றாக்குறையை சமாளிக்க, சென்னையில் அமல்படுத்தப்படும் 2 மணி நேர மின்தடையை, மூன்று அல்லது நான்கு மணி நேரமாக அதிகரித்து, தமிழகம் முழுவதும், சமச்சீராக மின்தடை செய்ய, மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.லோக்சபா தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், தலைநகரில், மின்தடை நேரத்தை அதிகரித்தால், அது, தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிராக அமையும் என்ற, கருத்து நிலவுகிறது. இதனால், மின் வாரிய அதிகாரிகளின் முடிவிற்கு, தமிழக அரசு உயர் அதிகாரிகள், அனுமதி அளிக்க மறுத்து விட்ட தாக கூறப்படுகிறது. ஆனால், தேர்தல் முடிந்தவுடன் இந்த மின்வெட்டு திட்டம் அமல்படுத்தப்படும் என, தெரிகிறது.

தவிர்க்க முடியாது:

இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கோடை காலத்தில், அதிக வெப்பம் காரணமாக, அனல்மின் நிலையங்களில், பழுது ஏற்படுவதால், மின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. காற்றாலைகளில், கூடுதல் மின்சாரம் கிடைக்கும் வரை, மின்தடை தவிர்க்க முடியாது' என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...