தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர், சுயதொழில் புரிவோர் வசதிக்காக மனித
வள மேம்பாடு பாடத்தில் முதுகலை டிப்ளமோ படிப்பை,
திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மை கழகம் (ஐ.ஐ.எம்.,) துவக்கியுள்ளது.
திருச்சியில் 2012ல் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனமான, இந்திய மேலாண்மை கழகம் துவக்கப்பட்டது. சென்னையில் இந்த நிறுவனத்தின் கிளை, ஈக்காட்டுத்தாங்கலில் செயல்படுகிறது. ஐ.ஐ.எம்., சார்பில், ஏற்கனவே வர்த்தக மேலாண்மை குறித்த முதுகலை டிப்ளமோ வகுப்பு நடந்து வருகிறது.
இந்நிலையில், மனிதவள மேம்பாடு தொடர்பான, முதுகலை டிப்ளமோ படிப்பை, ஐ.ஐ.எம்., அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை கிளையில் இப்படிப்பு துவக்கம் குறித்து, ஐ.ஐ.எம்., திருச்சியின் இயக்குனர் ப்ரபுல்லா அக்னிஹோத்ரி, பேராசிரியர்கள் மணிகண்டன், விஜயா, அபிஷேக் ஆகியோர் கூறியதாவது:
தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர், சுயதொழில் செய்பவர்கள், தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள இந்த புதிய படிப்பில் சேரலாம். சென்னை கிளையில், மாலை, 6:45 முதல், 9:30 மணி வரை, வாரத்திற்கு நான்கு நாட்கள் வகுப்பு நடைபெறும். மூன்றாண்டு படிப்பான இதில் சேர, 10 லட்சம் ரூபாய் கட்டணத்தை, ஒன்பது தவணைகளாக செலுத்தலாம்.
மேலும், வர்த்தக மேலாண்மை, முதுகலை டிப்ளமோ படிப்பிற்கும் மூன்றாவது ஆண்டாக மாணவர் சேர்க்கை நடக்கிறது. இங்கு துவக்கப்படும் படிப்புகள் குறித்து, இம்மாதம் 20ல், சென்னை மையத்தில் நடத்தப்படும் சிறப்பு அறிமுக வகுப்பில் பங்கேற்று அறிந்து கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.