அரசியல் கட்சியினர், தொகுதிக்கு தொடர்பில்லாத நபர்கள் நாளை மாலை 6 மணிக்குள் வெளியேற வேண்டும்

நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலையொட்டி திருவள்ளூர் (தனி) தொகுதிக்கு பிறமாவட்டத்தில் இருந்து பிரச்சாரத்திற்காக
தங்கியிருக்கும் அரசியல் கட்சியினர், தொகுதிக்கு தொடர்பில்லாத நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான கொ. வீரராகவ ராவ் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 24-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. இதற்கான வாக்குப்பதிவு முடிவடைவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு (அதாவது 22-ந் தேதி மாலை 6 மணி) முதல் வாக்குப் பதிவு முடியும் வரை ஒழுங்குமுறை விதிகள் நடைமுறைக்கு வருகின்றன.இதையொட்டி இம்மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்துவது, அதில் பங்கேற்பது ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது.
மேலும் தேர்தலுக்காக வேட்பாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வாகன உரிமைகள் 22-ந் தேதி மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. வாக்குப்பதிவு நாளன்று ஒவ்வொரு  வேட்பாளரும் ஒரு வாகனத்துக்கான உரிமத்தை அவரது உபயோகத்துக்காக தனியாக வாங்க வேண்டும். அவரது ஏஜெண்டுக்காக தனி வாகன உரிமமும் பெற்றுக் கொள்ளலாம். ஓவ்வொரு சட்டசபை தொகுதிகள் வரியாக அந்த வேட்பாளருக்கு உழைத்தவர்களுக்காக தனி வாகன உரிமம் பெற்றுக் கொள்ளளலாம். பிரசாரத்துக்காக வாங்கப்பட்ட வாகன உரிமம், வாக்குப்பதிவு நாளன்று செல்லத் தகுந்ததல்ல.வெளியிடங்களில் இருந்து தொகுதிக்குள் வரும் வாகனப் போக்குவரத்தை கண்காணிப்பதற்காக தொகுதி எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும்.
வாடகை வாகனங்களில் வாக்காளர்களை வேட்பாளர்களோ, அவர்களின் முகவர்களோ வாக்குச் சாவடிகளுக்கு அழைத்து வரக்கூடாது.தொகுதி அல்லது மாவட்டத்துக்கு வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட அரசியல்  கட்சியினர், நிர்வாகிகள் போன்றவர்கள், தற்போது தங்கி இருக்கும் தொகுதி அல்லது இம்மாவட்டத்தை விட்டு 22-ந் தேதி மாலை 6 மணிக்குள் வெளியேற வேண்டும்.அந்தந்த மாவட்டத்தைச் சேராத வெளியாட்கள் யாரும் தங்கி இருக்கிறார்களா என்பது குறித்து, திருமண மண்டபங்கள், விடுதிகள், லாட்ஜ்கள், சமூகக் கூடங்கள், விருந்தினர் விடுதிகள் வாரியாக சோதனையிட்டு உறுதி செய்யப்படும்.
வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சிகளுக்கு வாக்குச் சாவடிகளில் இருந்து 200 மீட்டர் தூரத்துக்கு மேல் தற்காலிக அலுவலகத்தை அமைத்துக் கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
  

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...