தேர்தல் பணி பயிற்சி முகாம் 800 ஊழியர்கள் பங்கேற்பு

ஓட்டுப்பதிவு இயந்திரத்தை கையாளுதல் உள்ளிட்ட தேர்தல் பணி பயிற்சி முகாமில், அரசு ஊழியர்கள், ௮௦௦ பேர் பங்கேற்றனர்.

கொரட்டூர், பக்தவத்சலம் பள்ளி, கல்லுாரி வளாகத்தில், லோக்சபா தேர்தலுக்கான பயிற்சி வகுப்பு, நேற்று காலை துவங்கியது. அம்பத்துார் உதவி தேர்தல் அலுவலர், ராஜேந்திரன் தலைமையில் நடந்த பயிற்சி முகாமில், சென்னை நகர், புறநகர், திருவள்ளூர் மாவட்ட கல்வி மற்றும் வருவாய் துறை ஊழியர்கள், 800 பேர் கலந்து கொண்டனர்.
நாற்பது பேருக்கு, ஒரு வகுப்பு என, மொத்தம், 20 பயிற்சி வகுப்புகள் வரை நடந்தது. அதில், ஓட்டு ஒப்புகை சீட்டு மற்றும் ஓட்டு இயந்திரங்கள் கையாள்வது உள்ளிட்ட தேர்தல் பணிகள் குறித்து, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதுகுறித்து, உதவி தேர்தல் அலுவலர், ராஜேந்திரன், கூறியதாவது:
தேர்தல் பணியில் ஈடுபடும், ஊழியர்களுக்கான பயிற்சி வகுப்புகள், மூன்று கட்டமாக நடக்கும். தற்போது நடந்து வரும் 2வது கட்ட முகாமில், 1,600 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். 3வது கட்ட முகாம் வரும், 23ம் தேதி நடக்கும். மேலும், பணி மற்றும் தேர்தல் விதிமுறைகள் குறித்த சந்தேகங்கள் குறுஞ் செய்தி பதில் பெறும் பயிற்சியும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஓட்டு போட வசதியாக, அங்கு தபால் ஓட்டு பெட்டியும் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். செங்குன்றம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் தேர்தல் பணி பயிற்சி முகாம் நடந்தது. அதில் 1,000 பேர் வரை கலந்து கொண்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...