செல்ல பிள்ளைங்க காலை உணவை மறுக்கிறாங்களா?


பள்ளி செல்லும் என் மகள் காலை நேரத்தில் சாப்பிட மறுக்கிறாள். பாட்டில் ட்ரிங்க்ஸ் மட்டுமே குடிக்கிறாள். அவளுக்கு காலை 
உணவாக ஃப்ரெஷ்  ஜூஸை மட்டும் கொடுக்கலாமா?

குழந்தைகள் நல மருத்துவர் ஸ்ரீபிரதா முரளிதரன்

காலை நேர உணவை தவிர்ப்பது ஆபத்தான விஷயம். வெறுமனே ஃப்ரெஷ் ஜூஸ் மட்டும் கொடுத்தால் குழந்தைக்கு போதுமான சத்துகள் கிடைக்காது.  குழந்தை, அவசர அவசரமாக கிளம்புவதால் உணவுச் சாப்பிட நேரமிருக்காது. காலையில் சீக்கிரமே குழந்தையை எழுப்பி, பரபரப்பாக இயங்க  வைத்தாலே சரியான நேரத்தில் பசி ஏற்பட் டுவிடும்.

சாப்பிடப் பிடிக்கவில்லை என்று சொன்னாலும் வற்புறுத்தியாவது எதையாவது சாப்பிடக் கொடுத்துவிட வேண்டும். கார்ன் ஃப்ளேக்ஸ், பிரெட்,  சாண்ட்விட்ச், பழங்கள் என எதுவாக இருந்தாலும் சரி. இதோடு, ஒரு கப் ஃப்ரெஷ் ஜூஸ் கொடுக்கலாம். பாட் டில்களில் அடைத்த, கேஸ் நிரம்பிய  பானங்களை கொடுக்க வேண்டாம் - குறிப்பாக வெறும் வயிற்றில்... அது உடல் உபாதைகளை  ஏற்படுத்தும்!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...