வகுப்பறையில் கண்காணிப்பு கேமரா ஆசிரியைகள் கடும் எதிர்ப்பு


இங்கிலாந்தில் வகுப்பறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு ஆசிரியைகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தில் பள்ளி வகுப்பறைகளில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களுக்கு ஆசிரியைகள் மத்தியில் எதிர்ப்பு பரவி வருகிறது. பெரும்பாலான பள்ளி நிர்வாகங்கள் ஊழியர்களை சோதனை சாலை எலிகளை போல கருதி கண்காணிப்பு கேமரா வழியாக கண்காணிக்கின்றனர் என்று அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தின் மிகப் பெரிய ஆசிரியர்கள் சங்கம், தங்களது உறுப்பினர்கள் பலர் பள்ளி வகுப்பறைகளில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் குறித்து புகார் தெரிவித்துள்ளனர் என்கிறது. 89 சதவீத ஆசிரியைகள் கண்காணிப்பு கேமராக்களை அணைக்க முடியவில்லை என்றும், 88 சதவீதம் பேர் தங்களது பாடங்களை அவற்றின் மூலமாக பதிவு செய்து நிர்வாகம் கண்காணிக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.


55 சதவீதம் ஆசிரியைகள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை தலைமை நிர்வாகிகள் பார்க்கின்றனர் என்றும், அதன் மூலம் ஊழியர்கள் மீது எதிர்மறையான எண்ணங்களை கொண்டே நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டி உள்ளனர். பாதுகாப்பு காரணங்களை கூறி ஊழியர்களை வேவு பார்க்கவே நிர்வாகத்தினர் கேமராக்களை பொருத்துகின்றனர் என்கின்றனர்.

மேலும் சோதனை சாலை எலிகளை போல தாங்கள் கண்காணிக்கப்படுவது எரிச்சலாக இருக்கிறது. சோதனை சாலை எலிகளுக்கு கூட சுதந்திரம் இருக்கிறது. வேலை நேரம் இல்லாத நேரங்களில் கூட தனிப்பட்ட உரையாடல்களை பதிவு செய்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்கிறது என்று கூறுகின்றனர்.  தற்போது இந்த விவகாரம் இங்கிலாந்து முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...